புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு சுகாதார பேரிடரை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், டெல்லி முழுவதிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசால் பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், டெல்லி அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் (100% Work From Home) என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க சிறப்புப் படை நியமிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நிலவும் காற்று மாசுபாட்டைக் (Air Pollution) கட்டுப்படுத்தும் மற்ற நடவடிக்கைகளுடன் கட்டுமானப் பணிகளுக்கு தடை, பொதுப் பள்ளிகளை மூடுதல், வீட்டிலிருந்து வேலை செய்தல் போன்ற பல வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கடுமையான காற்று மாசுபாட்டை சமாளிக்க தில்லி திணறி வரும் நிலையில், காற்று மாசுபாட்டை கட்டுக்குள் வைத்திருக்க ஆம் ஆத்மி அரசு எடுத்த பல நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமை அறிவித்தார்.
Also Read | Work From Home: வைரலாகும் சிறுமியின் வீடியோ
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ராய், டெல்லி அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டிலிருந்து 100% வேலை (Work From Home) இருக்கும் என்று கூறினார். "அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள் தவிர, டெல்லியில் அனைத்து வாகனங்களும் நுழைவதைத் தடை செய்யப்படுகிறது. அதற்கான வழிமுறைகளையும் வழங்கியுள்ளோம்" என்று கோபால் ராய் கூறினார்.
காவல் துறை மற்றும் போக்குவரத்துத்துறை இணைந்து புதிய அறிவுறுத்தல்கள் கடைபிடிப்பதை உறுதி செய்யும். செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி தலைவர் கோபால் ராய், தேசியத் தலைநகரில் நவம்பர் 21 வரை, கட்டுமானம் மற்றும் இடிப்பு தொடர்பான பணிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
ஆனால், மத்திய அரசு ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்ல அறிவுறுத்திய உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த மத்திய அரசு, இந்த பரிந்துரையை செயல்படுத்த விரும்பவில்லை என்றும், அதற்குப் பதிலாக டெல்லியில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள், வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க கார்பூலிங்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துவதாக தெரிவித்தது.
Air pollution in Delhi-NCR | Centre expresses unwillingness before the Supreme Court to ask its employees to work from home and instead it has advised its employees in Delhi to resort to carpooling to reduce the number of vehicles used by them for commuting. pic.twitter.com/ET3vQINa2x
— ANI (@ANI) November 17, 2021
பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க போக்குவரத்து காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.
டெல்லியில் தற்போது 372 தண்ணீர் தெளிக்கும் டேங்கர்கள் இயங்கி வருவதாக தெரிவித்த அமைச்சர், தண்ணீர் தெளிப்பதை உறுதி செய்வதற்காக தீயணைப்பு படையின் நீர் இறைக்கும் இயந்திரங்கள் 13 ஹாட்ஸ்பாட்களில் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தொழிற்சாலைகளில் எரிவாயுவை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும், மாசுபட்ட எரிபொருளைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த காற்று தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management (CAQM)) வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்டக் கூட்டம், கோபால் ராயின் வீட்டில் நடைபெற்றது.
READ ALSO | Air Pollution: உச்சகட்டத்தில் டெல்லியின் காற்று மாசுபாடு
சுற்றுச்சூழல் துறை, பொதுப்பணித்துறை (PWD), டெல்லி போலீஸ், போக்குவரத்து போலீஸ், டெல்லி மாநகராட்சி (MCD), மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் (Air Pollution) கட்டுப்படுத்தும் மற்ற நடவடிக்கைகளுடன், கட்டுமானப் பணிகளுக்கு தடை, பள்ளிகளை மூடுதல், வீட்டிலிருந்து வேலை செய்தல் போன்ற பல வழிமுறைகளை CAQM வெளியிட்டுள்ளது.
டெல்லி, பஞ்சாப் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநில அரசுகளும், காற்று மாசு தொடர்பாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கடுமையான நடவடிக்கையை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் CAQM அறிவுறுத்தியுள்ளது.
நவம்பர் 22 ஆம் தேதிக்குள் இணக்க அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு ஐந்து மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ள CAQM, காற்று மாசு தொடர்பான வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுவதை தேசிய தலைநகர் பிராந்திய மாநிலங்களின் தலைமைச் செயலாளர் (Chief Secretary of Nation Capital Region states, GNCTD) தொடர்ந்து கண்காணிப்பார் என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
READ ALSO | அதிகரிக்கும் மாசை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR