காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ராணுவத்தை பலவீனப்படுத்தும்: நிர்மலா சீதாராமன் சாடல்

2019 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள "தேர்தல் அறிக்கை" ராணுவத்திற்கு எதிரானது என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்து உள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 3, 2019, 06:48 PM IST
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ராணுவத்தை பலவீனப்படுத்தும்: நிர்மலா சீதாராமன் சாடல் title=

டெல்லி: 2019 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள "தேர்தல் அறிக்கை" ராணுவத்திற்கு எதிரானது என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்து உள்ளார்

நேற்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாசித்தார். சோனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி கூட்டாக இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு நன்மை, பெண்களுக்கு பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124ஏ (தேசத்துரோக சட்டப் பிரிவு) நீக்கப்படும் என்றும், காஷ்மீரில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மறு பரிசீலனை செய்வோம், காஷ்மீரில் படைகள் எண்ணிக்கையை குறைப்போம் என்றும் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளுக்கு பயன் அளிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுவதாக காங்கிரஸ் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இது இந்திய ஆயுதப்படைகளின் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீக்குவதால் தீவிரவாதிகளுக்கு பயன் அளிக்கும். நாட்டின் பாதுகாப்பு விசியத்தில் ஆபத்து ஏற்ப்படும். 

நாட்டுக்காக இன்னுயிரை தந்த ராணுவ வீரர்களை அவமதிக்கும் செயல். அவர்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் வகையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை உள்ளது.

தேசத்துரோக சட்டத்தை நீக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதன்மூலம் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Trending News