மக்களவை தேர்தல்; முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது CPI(M)!

எதிர்வரும் மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (CPI-M) சார்பில் போட்டியிடவிருக்கும் 15 பேர் பெயர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது!

Last Updated : Mar 8, 2019, 09:16 PM IST
மக்களவை தேர்தல்; முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது CPI(M)! title=

எதிர்வரும் மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (CPI-M) சார்பில் போட்டியிடவிருக்கும் 15 பேர் பெயர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது!

வெளியான வேட்பாளர் பட்டியல் படி ராய்குஞ்ச் மற்றும் முர்ஷிதாபாத் தொகுதிகளில் முறையே மொகமது ஷலீம் மற்றும் பர்துருசா கான் போட்டியிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட இத்தொகுதிகளில் இவ்விருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான அறிவிப்பினை சிபிஐ (எம்) தலைவர் பிமன் போஸ் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இடதுசாரிக் கட்சிகள் இன்று தெரிவிக்கையில் நாடுமுழுவதும் 24 மாநிலங்களில் 53 இடங்களை தேர்ந்தெடுத்து போட்டியிடவுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது முதல் வேட்பாளர் பட்டியலினை வெளியிட்டுள்ளது. 

பீகார் மாநிலத்தில் ராஷ்டீரிய ஜனதா தளம் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைப்பெற்று வரும் நிலையில் மாணவர் தலைவர் கன்யாஹ்யா குமார் பெயர் இந்த வேட்பாளர் பட்டியலில் விடுப்பட்டுள்ளது.

ANI செய்தி நிறுவனத்தின் படி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தலைமையில் 11 உறுப்பினர்கள் கொண்ட கொள்கை விளக்க குழுவினை நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் பெயர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. இந்த பட்டியலில் 15 வேட்பாளர்களில் 11 பேர் உத்தர பிரதேசத்தில் போட்டியிடுபவர்கள் மற்ற நான்கு வேட்பாளர்கள் குஜராத்தில் போட்டியிடுவார்கள் எனவும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 11 வேட்பாளர்கள் கொண்ட உத்தர பிரதேசத்தில் பட்யலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியி முறையே அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தற்போது இடதுசாரிக் கட்சிகள் தங்களது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News