காதலர் தினத்தன்று மாட்டை கட்டிப்பிடியுங்கள் - அரசின் முடிவு... ஷாக்கில் இளசுகள்!

Cow Hug Day: உலகம் முழுவதும் பிப். 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், விலங்குகள் நல வாரியம் அன்று வேறு தினத்தை அனுசரிக்க கோரிக்கை விடுத்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 9, 2023, 01:05 AM IST
  • இந்த அறிவிப்பு பிப். 6 தேதியிட்டு வெளியாகியுள்ளது.
  • அரசுக்கு எதிர்க்கட்சிகள எதிர்ப்பு
காதலர் தினத்தன்று மாட்டை கட்டிப்பிடியுங்கள் - அரசின் முடிவு... ஷாக்கில் இளசுகள்! title=

Cow Hug Day: கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் பிப். 6ஆம் தேதியிட்ட அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிப். 14ஆம் தேதி பசுமாடு அணைப்பு (கட்டிப்பிடிக்கும்) தினமாக மக்கள் அனுசரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அந்த தினத்தால் அன்பு உணர்வு பரவும் மற்றும், கூட்டு மகிழ்ச்ச்சி ஊக்கப்படுத்தப்படும். 

"தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாடலாம்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பசுக்களை கட்டிப்பிடிப்பது "உணர்ச்சி வளம்" மற்றும் "தனிநபர் மற்றும் கூட்டு மகிழ்ச்சியை" அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. 

மேலும் படிக்க |  குழந்தையை பெற்றெடுத்த திருநம்பி ; இந்தியாவில் முதல் முறை - ஆணா, பெண்ணா என்று கேட்டால்...

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த நோட்டீசில், "மேற்கத்திய கலாச்சாரத்தின் முன்னேற்றம்" காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், "மேற்கத்திய நாகரிகத்தின் திகைப்பூட்டும் நமது உடல், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மாற்றியுள்ளது." என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கருத்து மோதல் நடைபெற்று வருகிறது. பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பசுமாடு பாதுகாப்பு சார்ந்து பல்வேறு திட்டங்களை உருவாக்கியது. மேற்கு வங்க மக்களவை உறுப்பினர், மஹு மொய்த்ரா,"இப்போது அரசாங்கம் நமக்காக காதலர் தின திட்டங்களை வகுத்துள்ளது..." என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பிப். 7ஆம் தேதி முதல், பிப். 14ஆம் தேதிவரை வேலைன்ஸ்டைன் வாரம் கொண்டாடப்படுவது இயல்பாகும்.

மேலும் படிக்க |  அதிர்ச்சி! 11-ம் வகுப்பு மாணவனை 20 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த 10 பேர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News