COVID தொற்றால் கண் பார்வை கோளாறு ஏற்பட்ட முதல் நோயாளி பற்றி AIIMS பகீர் தகவல்

வைரஸ் மூளை மற்றும் நுரையீரலை பெரும்பாலும் பாதிக்கிறது என்பதை இப்போது நாம் அறிவோம். அவரது இந்த நிலைக்கு COVID-19 தொற்று காரணம் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளதால், நாங்கள் இந்த தகவல்கலை அறிக்கையாக வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று AIIMS கூறியுள்ளது. 

Last Updated : Oct 20, 2020, 02:50 PM IST
  • COVID-19 தொற்றால் தூண்டப்பட்ட நரம்பு பாதிப்பால் ஒரு சிறுமியின் கண் பார்வை மங்கலாகியுள்ளதாக AIIMS கூறியுள்ளது.
  • நோயெதிர்ப்பு சிகிச்சையால் 11 வயது சிறுமியின் உடல்நிலை மேம்பட்டது.
  • அவரது பார்வையில் சுமார் 50 சதவீதம் மீண்டும் பெறப்பட்ட பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டார்.
COVID தொற்றால் கண் பார்வை கோளாறு ஏற்பட்ட முதல் நோயாளி பற்றி AIIMS பகீர் தகவல் title=

புதுடெல்லி: COVID-19 தொற்றால் தூண்டப்பட்ட நரம்பு பாதிப்பால் ஒரு சிறுமியின் கண் பார்வை மங்கலாகியுள்ளதாக டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) கூறியுள்ளது. COVID-19 தொற்றின் இப்படிப்பட்ட பக்கவிளைவு முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AIIMS மருத்துவமனை, 11 வயது சிறுமிக்கு, கொரோனா வைரஸ் நோய் COVID-19-ஆல் மூளை நரம்பு சேதம் ஏற்பட்டதைக் கண்டறிந்தது என்று இந்துஸ்தான் டைம்ஸ் செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுமியின் உடல்நிலை குறித்த அறிக்கையை AIIMS மருத்துவர்கள் தயாரித்து வருகின்றனர். அறிக்கையின் வரைவின் படி, “11 வயது சிறுமியில் COVID-19 நோய்த்தொற்றால் தூண்டப்பட்ட கடுமையான டெமிலினேட்டிங் நோய்க்குறி (ADS) இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். குழந்தைகளில், சிறு வயதினரிடையே இது இப்படி முதன் முறையாக அறியப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த பெண் பார்வை இழப்பு ஏற்பட்டதால் எங்களிடம் வந்திருந்தார். MRI ஸ்கேனில் ADS பற்றி தெரியவந்தது. இது ஒரு புதிய வெளிப்பாடாகும். இருப்பினும், வைரஸ் மூளை மற்றும் நுரையீரலை பெரும்பாலும் பாதிக்கிறது என்பதை இப்போது நாம் அறிவோம். அவரது இந்த நிலைக்கு COVID-19 தொற்று காரணம் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளதால், நாங்கள் இந்த தகவல்கலை அறிக்கையாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று AIIMS-ல் உள்ள குழந்தை மருத்துவத்துறையின் டாக்டர் ஷெபாலி குலாட்டி கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு

மெய்லின், மூளை சமிக்ஞைகளை சேதப்படுத்துவதோடு நரம்பியல் செயல்பாடுகளை பாதிக்கும் சுகாதார நிலைமைகள் ADS-ல் அடங்கும்.  அறிக்கையின்படி, நரம்புகளை உள்ளடக்கிய பாதுகாப்பு அடுக்கு மெய்லின் என்று அழைக்கப்படுகிறது.

நோயெதிர்ப்பு சிகிச்சையால் 11 வயது சிறுமியின் உடல்நிலை மேம்பட்டது. மேலும் அவரது பார்வையில் சுமார் 50 சதவீதம் மீண்டும் பெறப்பட்ட பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டார்.

COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றொரு 13 வயது சிறுமிக்கும், காய்ச்சல் மற்றும் என்செபலோபதி (மூளையில் வீக்கம்) ஆகியவை ஏற்பட்டதையடுத்து அவர் AIIMS-ல் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், அவரது இந்த உடல்நிலை COVID-19 ஆல் தூண்டப்பட்டதா என்பதை மருத்துவர்கள் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் அது உறுதியாகவில்லை. 

ALSO READ: மனிதர்களின் தோலில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News