நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று பாதிப்புகளுக்கு மத்தியில், நான்கு நோயாளிகளுக்கு B.A. 4 ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் மூன்று பேருக்கு B.A. 5 கொரோனா வைரஸின் ஓமிக்ரான் திரிபு தொற்று பாதிப்பு முதல் முறையாக மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளன என்று அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரியை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அனைத்து நோயாளிகளுக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன என்றும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் சுகாதார அதிகாரிகள் கூறினர். ஏழு நோயாளிகளும் புனேவைச் சேர்ந்தவர்கள்.
தொற்று உறுதியானவர்களில், நான்கு நோயாளிகள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இருவர் 20-40 வயதுக்குட்பட்டவர்கள். ஒரு நோயாளி ஒன்பது வயது சிறுவர் என அதிகாரி மேலும் கூறினார். ஆறு பெரியவர்களும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றுள்ளனர். அதே நேரத்தில் ஒருவர் பூஸ்டர் டோஸும் போடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா உட்பட உலகின் சில பகுதிகளில் கொரோனா வைரஸின் மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாட்டின் BA.4 மற்றும் BA.5 திரிபுகள் ஏப்ரல் மாதத்தில் கண்டறியப்பட்டன, என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது; எச்சரிக்கும் WHO
புனே நோயாளிகளின் மாதிரிகள் மே 4 மற்றும் 18 க்கு இடையில் எடுக்கப்பட்டன. அவர்களில் இருவர் தென்னாப்பிரிக்கா மற்றும் பெல்ஜியத்திற்கும், மூன்று பேர் கேரளா மற்றும் கர்நாடகாவிற்கும் சென்றுள்ளனர். மற்ற இரண்டு நோயாளிகளுக்கும் சமீபத்திய பயண வரலாறு ஏதும் இல்லை.
தொற்று பாதித்தவர்களின் மாதிரியின் முழுமையான மரபணு வரிசைமுறை அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்டது. மேமும் இதனை ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய உயிரியல் தரவு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR