காங்கிரஸ், பாரத் ஜோடோ யாத்ரா கணக்குகளை முடக்க ட்விட்டருக்கு நீதிமன்றம் உத்தரவு!

KGF -2 படத்தின் ஒலிப்பதிவுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் காரணமாக MRT மியூசிக் நிறுவனத்துக்குச் சொந்தமான சட்டப்பூர்வ காப்புரிமையை மீறியதாகக் கூறப்படும் காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடோ யாத்ராவின் கணக்குகளை தற்காலிகமாக முடக்குமாறு ட்விட்டருக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 7, 2022, 09:08 PM IST
  • முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் மீது, பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாக கிரிமினல் புகார்.
  • காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடோ யாத்ராவின் கணக்குகளை தற்காலிகமாக முடக்குமாறு ட்விட்டருக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.
காங்கிரஸ், பாரத் ஜோடோ யாத்ரா கணக்குகளை முடக்க ட்விட்டருக்கு நீதிமன்றம் உத்தரவு! title=

புதுடெல்லி: KGF -2 படத்தின் ஒலிப்பதிவுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் காரணமாக MRT மியூசிக் நிறுவனத்துக்குச் சொந்தமான சட்டப்பூர்வ காப்புரிமையை மீறியதாகக் கூறப்படும் காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடோ யாத்ராவின் கணக்குகளை தற்காலிகமாக முடக்குமாறு ட்விட்டருக்கு பெங்களூரு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. MRT  இசை நிறுவனம் அளித்த புகாரின் பேரில் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சுப்ரியா ஷிரினேட் ஆகியோர் மீது யஷ்வந்த்பூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பெங்களூரைச் சேர்ந்த இசைப்பதிவு நிறுவனத்தின் வணிக கூட்டாளி ஒருவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் மீது, இந்தி திரைப்படத்தின் இரண்டு பாடல்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாக கிரிமினல் புகார் அளித்துள்ளார். காப்புரிமைச் சட்டத்தை மீறி அனுமதியின்றி திரைப்படத்தின் பாடல்களுடன் கூடிய இரண்டு வீடியோக்களை பாரத் ஜோடோ யாத்ராவின் போது கட்சி வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது.

மேலும் படிக்க | நம்ம சென்னையில் வந்தே பாரத் ரயில்... நேரம், கட்டண விபரங்கள் இதோ!

MRT மியூசிக் நிறுவனத்தின் வணிக பங்குதாரரான எம் நவீன் குமார், "எங்கள் அனுமதியின்றி காங்கிரஸ் பாடல்களை நகலெடுத்து, மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக தங்கள் வீடியோக்களில் பயன்படுத்தியது. அதை அவர்கள் சொந்த இசை போல் சித்தரித்தனர்" என்றார். "குற்றம் சாட்டப்பட்டவரின் மேற்கூறிய சட்டவிரோத செயல்கள், பதிப்புரிமைச் சட்டத்தின் 63வது பிரிவின் கீழ் ஒரு குற்றமாகும். பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தவறான மின்னணுப் பதிவை உருவாக்குவதும் கடுமையான குற்றமாகும் " என புகாரில் கூறப்பட்டுள்ளது.

சட்ட நிபுணர் ஒருவர் இது குறித்து கூறுகையில், இரண்டு வகையான விதிமீறல்கள் நடந்துள்ளன. ஒன்று, அவர்கள் ஒரு வீடியோவில் பாடல்களை சட்டவிரோதமாக நகலெடுத்து மீண்டும் தயாரித்துள்ளனர். இரண்டாவதாக, காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் விளம்பரப்படுத்த பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

மேலும் படிக்க | EWS Reservation Verdict: 100 ஆண்டுகள் போராட்டத்தில் பின்னடைவு... தமிழ் மண்ணின் சமூக நீதி குரல் தொடரும் - ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News