கொரோனா பரவல்: இந்தியா மீதான பயண தடையை UAE நீட்டித்துள்ளது

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாது அலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருதால், இந்தியா மீதான பயணத் தடையை நீட்டித்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உத்தரவிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 4, 2021, 09:37 PM IST
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
  • மேலும், கொரோனா தொற்றுக்கு 3,449 பேர் பலியாகி உள்ளனர் என சுகாதார அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.
  • மூன்று நாட்களுக்கு முன் தொற்று பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது
கொரோனா பரவல்: இந்தியா மீதான பயண தடையை UAE நீட்டித்துள்ளது title=

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாது அலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருதால், இந்தியா மீதான பயணத் தடையை நீட்டித்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு 3,449 பேர் பலியாகி உள்ளனர் என சுகாதார அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில், இந்தியா மீதான பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் (UAE)  நீட்டித்துள்ளது.

நேற்று முன்தினம் 3.92 லட்சம் என்ற அளவிலும், நேற்று 3.68  லட்சம் என்ற அளவிலும் இருந்த தொற்று பாதிப்பு இன்று 3.57 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்களுக்கு முன் தொற்று பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியப் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கான தடை நீட்டிக்கப்படுகிறது. ஆனால், அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் தாயகம் செல்ல, அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | TMC தொண்டர்களால் பற்றி எரியும் வங்காளம்; குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகுமா 

பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தங்களது நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று  அறிவுறுத்தியுள்ளன. இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு கவலையளிக்கும் விதமாக உள்ளது.

கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் கூடவே, தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ALSO READ | தமிழகத்தில் கொளுத்தும் வெயிலை குளிவிக்க அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News