ZyCov-D: இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணி விரைவில்..!!

இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசியான ZyCoV-D தடுப்பு மருந்தின் 1 கோடி டோஸ்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 7, 2021, 05:40 PM IST
ZyCov-D: இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணி விரைவில்..!!  title=

இந்தியாவைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமான சைடஸ் கேடிலா (Zydus Cadila)  தயாரித்துள்ள தடுப்பு மருந்தான சைகோவ்-டி  தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு (ZyCov-D vaccine) இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஆகஸ்ட் மாதம் அனுமதி அளித்தது. 12 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஊசி அல்லாத இந்த தடுப்பு மருந்து நல்ல பலனை தரும்  என கூறப்படுகிறது.

ZyCov-D சிறப்பம்சம் என்னவெனில் இது, புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஊசியின்றி, சதையின் சிறிய துளைக்குள் செல்லும்படியான எளிமையான ஒரு மருந்து செலுத்தும் கருவி மூலம் செலுத்தப்படும் மருந்தாகும். அதனால், இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதும் எளிது. 

இந்நிலையில், சைடஸ் கேடிலா (Zydus Cadila)  தயாரித்துள்ள என்ற ஊசியில்லா தடுப்பு மருந்தான சைகோவ்-டி  தடுப்பு மருந்தை ஒரு கோடி டோஸ் வாங்க மத்திய அரசு ஆர்டர் வழங்கியுள்ளது. Zydus Cadila ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்கும். இதை அடுத்து குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடnக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Zydus Cadila தடுப்பு மருந்தை, 28 நாட்களுக்குள்  மூன்று டோஸ்கள் கொடுக்கப்படவேண்டும் . இந்த டோஸ்  வழங்கப்படும். Zydus Cadila வின் தடுப்பூசி Zycov-D என்பது 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளம் பருவத்தினருக்கு வழங்குவதற்காக இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி ஆகும்.

அரசாங்கத்துடனான முந்தைய ஒப்பந்தத்திற்குப் பிறகு, Zydus Cadila அதன் கோவிட்-19 தடுப்பூசியின் விலையை ஒரு டோஸுக்கு 265 ரூபாயாகக் குறைக்க ஒப்புக்கொண்டது. ஊசி இல்லாத ZyCoV-D தடுப்பூசியின் ஒவ்வொரு டோஸுக்கும் 93 ரூபாய் விலையிலான வலியற்ற ஜெட் அப்ளிகேட்டர் தேவைப்படும்.  ஜெட் அப்ளிகேட்டர்  உட்பட ஒரு டோஸுக்கு ரூ.358 செலவாகும். 

ALSO READ | ZyCov-D: இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி

நிறுவனத்துக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு, தடுப்பூசியின் ஒரு டோஸின் விலையும் ரூ. 358 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 93க்கு செலவழிக்கும் ஜெட் அப்ளிகேட்டர் அடங்கும். 28 நாட்கள் இடைவெளியில் மூன்று டோஸ் கொடுக்க வேண்டும். டிஎன்ஏ அடிப்படையிலான மற்றும் ஊசி இல்லாத நாட்டில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் தடுப்பூசி இதுவாகும்.

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் ICMR ஆகியவற்றுடன் இணைந்து இந்த தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் கண்டறியப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் இரண்டாவது உள்நாட்டு தடுப்பூசியாக ZyCov-D இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | WHO vs Covaxin: அவசரகால பயன்பாட்டிற்காக கோவேக்சின் தடுப்பூசியை WHO அங்கீகரித்தது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News