ஒமிக்ரான் நெருக்கடிக்கு மத்தியில், மத்திய சுகாதார அமைச்சகம் 1 கொரோனா மருந்து மற்றும் இரண்டு புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி: அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரானின் நெருக்கடிக்கு மத்தியில், மத்திய சுகாதார அமைச்சகம் 1 கொரோனா மருந்து மற்றும் இரண்டு புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. CORBEVAX மற்றும் COVOVAX தடுப்பூசிகள் இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது தவிர, கொரோனா மருந்தான மோல்னுபிராவிர் மருந்துக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இது குறித்து இந்தியாவுக்கு வாழ்த்துகள் என்று ட்வீட் செய்துள்ளார். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில், CDSCO, சுகாதார அமைச்சகம் அவசரகால தடுப்பூசிகளான CORBEVAX, COVOVAX மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான Molnupiravir ஆகியவற்றை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
Congratulations India
Further strengthening the fight against COVID-19, CDSCO, @MoHFW_INDIA has given 3 approvals in a single day for:
- CORBEVAX vaccine
- COVOVAX vaccine
- Anti-viral drug MolnupiravirFor restricted use in emergency situation. (1/5)
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 28, 2021
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 க்கு எதிரான இந்தியாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் RBD புரோட்டீன் சப்- யூனிட் தடுப்பூசி CORBEVAX தடுப்பூசி என்றும் இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?
COVOVAX, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படும். கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த நோயாளிகளுக்கும், நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளவர்களுக்கும் அளிக்கப்படும் சிகிச்சைக்காக, அவசரகால பயன்பாட்டிற்காக, தமோல்னுபிராவிர் மருந்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR