காங்கிரஸ் தலைவரை விரைவில் தீர்மானிக்க வேண்டும் -சிந்தியா!

ஏழு வாரங்கள் கடந்துவிட்டன, காங்கிரஸ் செயற்குழு கட்சியின் அடுத்த தலைவரை தீர்மானிக்க வேண்டும் என ஜோதிராதித்யா சிந்தியா வலியுறுத்தியுள்ளார்!

Last Updated : Jul 12, 2019, 08:28 AM IST
காங்கிரஸ் தலைவரை விரைவில் தீர்மானிக்க வேண்டும் -சிந்தியா! title=

ஏழு வாரங்கள் கடந்துவிட்டன, காங்கிரஸ் செயற்குழு கட்சியின் அடுத்த தலைவரை தீர்மானிக்க வேண்டும் என ஜோதிராதித்யா சிந்தியா வலியுறுத்தியுள்ளார்!

காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவது கற்பனைக்கு எட்டாத மாற்றம் என்று கூறியதுடன், பழைய கட்சியை மீண்டும் உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு தலைவரை அவருக்கு பதிலாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த திரு சிந்தியா, கட்சியின் புதிய தலைவர் விரைவில் முடிவு செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

"ஏற்கனவே ஏழு வாரங்கள் கடந்துவிட்டன, காங்கிரஸ் செயற்குழு கட்சியின் அடுத்த தலைவரை தீர்மானிக்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியது. 

இதையடுத்து ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. எனினும், ராகுல் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு அடுத்த கட்சி தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று ராகுல் வலியுறுத்தினார். 

இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சுஷில் குமார் ஷிண்டே ஆகிய 2 பேரில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது.  இந்த பட்டியலில் தற்போது முகுல் வாஸ்னிக்கும் இணைந்துள்ளார். 

இதற்கிடையே சமீபத்தில் பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரிந்தர் சிங் காங்கிரசுக்கு இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என வலியுறுத்தினார். 

ராகுல் ராஜினாமாவைத் தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா, மிலிந்த் தியோரா போன்ற மாநில தலைவர்கள் ராஜினாமாவை அறிவித்துள்ளனர். போதாக்குறைக்கு கர்நாடகத்தில் காங்கிரஸ் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் சோனியா காந்தியை தற்காலிக தலைவராக நியமிக்க வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.  இருப்பினும் இதற்கு சோனியா சம்மதம் தெரிவிக்கவில்லை. 

ஏற்கனவே உடல்நலக் குறைவு காரணமாகத்தான் கட்சி தலைவர் பொறுப்பை ராகுலிடம் சோனியா விட்டுச் சென்றார். தற்போதும் உடல்நிலை ஒத்துழைக்காததால் தற்காலிக தலைவராகக் கூட செயல்பட முடியாது என்று நெருக்கமானவர்களிடம் சோனியா தெரிவித்துள்ளார். இதனால் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. 

இதற்கிடையில் தற்போது காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, தலைவர் பதவியை விரைவில் நிறப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்ற சிந்தியா இதுகுறித்து தெரிவிக்கையில்., "மக்கள் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். கட்சியும் என்னைப் போன்ற தனிப்பட்ட தலைவர்களும் குறைபாடுகளை அடையாளம் கண்டு, அவற்றைச் சரிசெய்து, மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற மக்கள் முன் செல்ல வேண்டும். நானோ மற்றவர்களாக இருந்தாலும் சரி, குறைபாடுகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது, இது முடிவுகளுக்கு வழிவகுத்தது.

70 வயதிற்கு மேற்பட்ட தலைவர்களுக்கு வழிகாட்டியாகவும், கட்சியை இளம் தலைவர்களால் நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்வியைத் தெளிவுபடுத்துகையில், திரு சிந்தியா, வயதைக் காட்டிலும் திறன்களில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் "நான் மோடிஜி அல்ல, நாட்டின் மக்கள்தொகையை வயதானவர்களாகவும், இளைஞர்களாகவும் பிரிக்க வேண்டாம். வயதுக்கு பதிலாக தனிப்பட்ட திறன்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆனால் காலப்போக்கில், மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதும் அவசியம்" எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி சந்தித்து வரும் இக்கட்டான சூழலில் சிந்தியாவின் இந்த கருத்து முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Trending News