மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா அளிக்க உள்ள விருந்தை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜே.குரியன் ஜோசப்பின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இவர் கடந்த 1980ம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை 6 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அதன்பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மேலவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதன்படி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேற்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.