137 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகிறார் மல்லிகார்ஜுன் கார்கே!

24 ஆண்டுகளுக்குப் பிறகு, 137 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தை சேராத புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 19, 2022, 02:56 PM IST
  • காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்றார்.
  • சுமார் 9500 பிரதிநிதிகள் என கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக திங்கள்கிழமை வாக்களித்தனர்.
  • காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட சுமார் 68 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
137 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகிறார் மல்லிகார்ஜுன் கார்கே! title=

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தேசிய தலைவராக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, காந்தி குடும்பத்திற்கு வெளியே இருந்து ஒரு தலைவர் நாட்டின் பழமையான கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக காந்தி குடும்பத்தை சேராத சீதாராம் கேசரி இருந்தார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த முறை கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் சசி தரூரை வீழ்த்தி மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்றார். மல்லிகார்ஜுன் கார்கே 7,897 வாக்குகளும், சசி தரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர்.

இது குறித்து சசி தரூர் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவராக பதவியேற்பது மிகவும் கவுரவமானது. அது மிகப்பெரிய பொறுப்பாகும். இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்றுள்ளார். இறுதித் தீர்ப்பு கார்கேவுக்கு சாதகமாக அமைந்தது. காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவரை மனதார வாழ்த்த விரும்புகிறேன்.

அதே சமயம், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கட்சிக்கு புதிய தலைமை மற்றும் பலமும் அளிப்பதற்காக பதவி விலகும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதில் பங்களித்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நன்றிகள் என்றார்.

காங்கிரஸின் சுமார் 9900 பிரதிநிதிகள் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட சுமார் 68 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல மூத்த தலைவர்கள் உட்பட சுமார் 9500 பிரதிநிதிகள் என கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக திங்கள்கிழமை வாக்களித்தனர்.

மேலும் படிக்க | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: கடந்த 137 ஆண்டுகளில் இது வரை தலைவர்களாக இருந்தவர்கள் யார்!

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் ஆறாவது முறையாக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 1939, 1950, 1977, 1997, 2000 ஆகிய ஆண்டுகளில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்துள்ளது. 22 வருடங்களின் பின்னர் இம்முறை தலைமை பதவிக்கான தேர்தல் நடந்துள்ளது என்றார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்றார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ராகுல் காந்தி அறிவித்தார். அதாவது ராகுல் காந்தியிடம் கட்சியில் உங்களுடைய செயல்பாடு மற்றும் பங்கு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ​“எனது பங்களிப்பை காங்கிரஸ் தலைவர் முடிவு செய்வார். கார்கேஜியிடம் கேளுங்கள். கட்சியில் எனது பங்கை கட்சியின் புதிய தலைவர் முடிவு செய்வார் என்றார்.

மேலும் படிக்க | காங்கிரஸ் தலைவர் தேர்தல் : ஓட்டு போடுவாரா ராகுல் காந்தி ? - மூத்த தலைவர் பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News