182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. குஜராத்தில் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் நிலையில், பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் உச்சகட்ட உத்திகளை கையாண்டு வருகின்றன.
இதனையடுத்து கடந்த 20-ம் தேதி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 77 வேட்பாளர்கள் பெயர் கொண்ட முதல் பட்டியல் வெளியானது. பின்னர் 21-ஆம் தேதி 13 வேட்பாளர் பெயர் கொண்ட இரண்டாவது பட்டியல் மற்றும் 76 தொகுதிகளுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை டெல்லியில் இன்று காலை உள்ள காங்கிரஸ் வெளியிட்டது.
Congress releases list of candidates selected by CEC for the second phase of elections to the Legislative Assembly of Gujarat #GujaratElection2017 pic.twitter.com/uSO2bkyeti
— ANI (@ANI) November 27, 2017
இந்நிலையில், தற்போது குஜராத் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.