காங்கிரஸ்-க்கு பிரசாந்த் கிஷோரின் ‘மான்ஸ்டர்’ பிளான்! 2024-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் இவரா?

2014-ம் ஆண்டு 'மோடி வேவ்' இந்தியா முழுவதும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது போல ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் பி.கே. அவரின் சாய்ஸ் மம்தா பேனர்ஜியாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Apr 18, 2022, 06:23 PM IST
  • பாஜக-வை வீழ்த்த காங்கிரஸ் வியூகம்
  • 2024-ம் ஆண்டும் தேர்தலுக்காக திட்டம்
  • பிரசாந்த் கிஷோரின் பிளான் என்ன?
காங்கிரஸ்-க்கு பிரசாந்த் கிஷோரின் ‘மான்ஸ்டர்’ பிளான்! 2024-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் இவரா? title=

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று பேசப்படுகிறது. படிப்படியாக கட்சிக்குள் மாற்றங்கள் செய்யலாம் என்று சோனியா காந்தியின் கோரிக்கைக்கு நோ சொல்லிவிட்டாராம் பிரசாந்த் கிஷோர். 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு உடனே அதிரடி காட்டினால் தான் வெற்றி பெற முடியும் என்பதிலுல் கரார் காட்டுகிராராம். மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங், ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, அஜய் மக்கான் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினர். 

Prasanth Kishore twitter

இந்த ஆலோசனை கூட்டமானது சுமார் 4 மணி நேரம் நீடித்ததாக தெரிகிறது. இதில் தான் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு அகல பாதாளத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு பேச்சு உலா வருகிறது. இந்நிலையில் இவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றது, தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. 

இந்த 4 மணி நேர சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை  சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், 2024ஆம் ஆண்டு தேர்தல் வியூகம் குறித்த விரிவான விளக்க அறிக்கையை காங்கிரஸ் தலைவரிடம் பிரசாந்த் கிஷோர் அளித்திருப்பதாக தெரிவித்தார். அதோடு பிரசாந்த் கிஷோர் முன்வைத்த செயல்திட்டத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் அமைக்கப்படும் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பின்னரே கட்சியின் தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். 

Rahul Gandhi Twitter

மேலும் படிக்க | இளையராஜா விவகாரம் வம்புக்கு இழுக்கப்படுகிறதா திமுக

இவரின் பேச்சே கட்சிக்குள் இருக்கும் பிரச்சனையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு, காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து மாற்றம் செய்தால் தான் வெற்றிக்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் அதிரடியாக பேசியுள்ளாராம். காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் பணியை படிப்படியாக செய்ய சோனியா காந்தி கோரிக்கை வைத்தும் அதனை மறுத்ததாக கூறப்படுகிறது. 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசம்., பீகார், ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட வேண்டும் என்றும், தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் , மேற்கு வங்கத்தில் கூட்டணியுடன் களம் காண வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் பரிந்துரை செய்துள்ளாராம். கட்சியின் பொறுப்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாம். 

Priyanka Gandhi twitter

களத்தில் இறங்காமல் நம்பர் வைத்து விளையாடும் பிரசாந்த் கிஷோர் தான் 2014-ம் ஆண்டு மோடிக்கென தனி பிம்பத்தை உருவாக்கியவர். அந்த தேர்தலில் பாஜக அசுர வெற்றி பெற்றதற்கு இவர் வகுத்த  வியூகமே காரணமாக அமைந்தது. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பேனர்ஜிக்காவும், தமிழக சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்காகவும் வியூகம் வகுத்த பி.கே இருவரையும் அரியணை ஏற்றினார். சமீப காலமாக டெல்லிக்கு விசிட் செய்து மம்தா பேனர்ஜி சோனியா காந்தி, சரத் பவார் உள்ளிட்ட கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் கைகோர்த்துள்ள மம்தா, எப்படியாவது 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை வீழ்த்த மும்முரம் காட்டி வருகிறார். அதோடு மு.க.ஸ்டாலினின் டெல்லி விசிட்டுக்குப் பிறகு பல அரசியல் விமர்சகர்களும் மாநிலங்களை தாண்டி தேசிய அளவில் திமுக கால் பதிக்கும் என்ற பேச்சை முன்வைத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | டிஆர்எஸ் கட்சியினரால் மகன், தாய் தற்கொலை! பேஸ்புக்கில் வாக்குமூல வீடியோ வைரல்

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பிற கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். பல மாநிலங்களில் வலுவான காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை விட்டு சென்றது இக்கட்சியை மேலும் ஆட்டம் காண செய்துள்ளது. பிரியங்கா காந்தியை மையப்படுத்தி உத்தர பிரதேசத்தில் களம் கண்டும் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது காங்கிரஸ். இதனால் 2024-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. தற்போது பிரசாந்த் கிஷோரை நம்பி தான் அவர்களின் எதிர்காலம் உள்ளது என்ற நிலைமை எழுந்துள்ள நிலையில், அவர் வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் சோனியா காந்தி உள்ளார். 

Prasanth Kishore Mamta Google

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தேர்தல் வேலைகளை செய்ய ஒரு தரப்பினர் வரவேற்றாலும், மற்றொரு தரப்பினர் அவர் வருகையை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. இவர் இறங்கினால் வாரிசுகளுக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்றும், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் கட்சிகளில் இருந்து பிரதமர்  வேட்பாளரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் கட்சியினர் பேசி வருகின்றனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்த கட்சியினர் தயாராக இல்லை. பிரசாந்த் கிஷோரும் கூட. இந்நிலையில், 2014-ம் ஆண்டு 'மோடி வேவ்' இந்தியா முழுவதும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது போல ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் பி.கே.

மேலும் படிக்க | Delhi Violence: வெளியான பரபர தகவல், 21 பேர் கைது

இதற்கு நடுவே அவரின் சாய்ஸ் மம்தா பேனர்ஜியாக இருக்கும் என்றும், மோடிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் அவரை வலுவாக காட்டினால், வெற்றி வாய்ப்பு சாத்தியம் என்று அவர் நம்புவதாக சில தகவல்கள் கூறுகின்றன. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் ஆட்டத்தையே மாற்றி அமைப்பவராக மம்தா பானர்ஜி இருப்பார் என முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்கா தெரிவித்த கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. 

காங்கிரஸ் கட்சி பலமான மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியும். அதோடு தற்போது தொடர் தோல்விகளால் துவண்டுள்ள கட்சியை மீட்க வேண்டும் என்றால், பிரதமர் வேட்பாளரில் சமரசம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. மிக விரைவில் இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா அல்லது பிரசாந்த் கிஷோர் திட்டம் என்ன என்பது தெரிந்துவிடும். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

  

Trending News