இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் கடந்த 2017 மார்ச்,19 முதல் யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக செயல்பட்டு வருகின்றார். தற்போது அம்மாநிலத்தில் உள்ளாச்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. 3 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்ட உள்ளாட்சி மன்ற தேர்தலின் முதல் வாக்கொடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்தது.
மேலும், இரண்டு கட்ட வாக்கொடுப்பு மீதமுள்ள நிலையில், உபி முதல்வர் யோகி ஆதித்தியநாத், நேற்று காலை பைரஜபாத்தில் தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர். இதை தொடர்ந்து தற்போது, ஜான்ஸியில் இன்று தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்;- கடந்த சில நாட்களாக, உலகின் பணக்கார மனிதன் பில் கேட்ஸ் உட்பட பல வெளிநாட்டு பிரதிநிதிகளை நான் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் தற்போது, உ.பி.யில் முதலீடு செய்ய விரும்புவதாகவும். இதற்கு முன் நிலைமை உகந்ததல்ல என்பதால் தற்போது முதலீடு செய்ய அவர்கள், விரும்புவதாக கருத்து தெரிவித்தனர் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
I met so many foreign delegations in past few days, including that of the world's richest man Bill Gates. All of them want to invest in UP. I asked them why they didn't do so earlier, they said that earlier the situation wasn't conducive enough: UP CM Yogi Adityanath in Jhansi pic.twitter.com/PJB4yrdFGf
— ANI UP (@ANINewsUP) November 24, 2017