தில்லி சிங்கு எல்லையில் (Singhu Border) நிறுத்தப்பட்டுள்ள தில்லி காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் மோதல் மூண்டதால் கூட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீச வேண்டியிருந்தது.
இரண்டு மாதம் காலமாக போராட்டத்தினால் ஏற்பட்ட இன்னல்களை சகித்துக் கொண்ட உள்ளூர் மக்கள், இப்போது போராட்டக்காரர்கள் இப்பகுதியை காலி செய்ய வேண்டும் என போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈட்டுபட்டனர். இந்த மோதலில் டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
உள்ளூர்வாசிகள் விவசாயிகளின் கூடாரங்களைத் தாக்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து இரு பிரிவுகளுக்கிடையில் கல் வீச்சு நடைபெற்றது.
குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பின் (Tractor Rally) போது, போராட்டக்காரர்கள் தேசியக் கொடியை அவமதித்ததால், ஆத்திரத்தில் இருக்கும் உள்ளூர்வாசிகள் இடத்தை காலி செய்யுமாறு கோரினர்.
சிந்து எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தில்லி காவல்துறையினரும் (Delhi Police) பாதுகாப்புப் படையினரும் கூட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தியதோடு, கூட்டத்தைக் கட்டுப்படுத்த லத்திசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகள் மற்றும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி சம்பவம், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. நாட்டை அவமானப்படுத்தும் வகையிலான இந்த சம்பவத்திற்குப் பிறகு, பொது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பேரணிக்கு லத்தியுடன் வாருங்கள்...வைரலாகும் விவசாயிகள் தலைவர் வீடியோ
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR