புது தில்லி: இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய சரியாக இன்னும் ஒருவாரம் இருக்கும் நிலையில், நாட்டின் தலைமை நீதிபதி (Chief Justice of India) எஸ்.ஏ. போப்டே (SA Bobde) வரி சீர்திருத்தம் தொடர்பாக ஒரு பெரிய அறிக்கையை அளித்துள்ளார். அரசாங்கத்தின் சார்பாக பொதுமக்கள் மீது அதிக அல்லது தன்னிச்சையான வரி விதிப்பது சமுதாயத்திற்கு அநீதி என்று அவர் கூறியுள்ளார். வரி ஏய்ப்பு ஒரு குற்றம் என்று கூறிய தலைமை நீதிபதி, மக்களின் மீது அதிகப்படியான வரிகளை விதிப்பதும் அரசால் செய்யப்படும் சமூக அநீதி ஆகும் என்றார்.
வருமான வரி தீர்ப்பாயத்தின் 79 வது அறக்கட்டளை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய தலைமை நீதிபதி, ஒரு தேனீ பூக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் சாற்றைப் பிரித்தெடுப்பது போலவே குடிமக்களிடமிருந்தும் வரி வசூலிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைக்கப் போகிற நேரத்தில் போப்டேவின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக நீதித்துறை இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து பேசுவதைத் தவிர்த்து வந்தது.
நிலுவையில் உள்ள வழக்குகள் குறைந்துள்ளன:
நாட்டிற்கான வரிகளை சீரமைப்பதில் நீதித்துறைக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது என்று தலைமை நீதிபதி கூறினார். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கவலைப்பட்ட அவர், இருப்பினும், உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் சியாட்டாட் ஆகியவற்றில் மறைமுக வரி தொடர்பான வழக்குகள் இரண்டு ஆண்டுகளில் 61% குறைந்துள்ளன. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, ஜூன் 30, 2017 நிலவரப்படி, 2 லட்சம் 73 ஆயிரம் 591 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 31 மார்ச் 2019 நிலவரப்படி அவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் 5 ஆயிரம் 756 ஆக குறைந்துள்ளது என்றார்.
வரிச் சர்ச்சையை உடனடியாகத் தீர்ப்பது முக்கியம்:
நேரடி வரி தொடர்பான வழக்குகள் குறித்து பேசும்போது, 3.41 லட்சம் வழக்குகள் கமிஷனரிடம் நிலுவையில் உள்ளன, அதே நேரத்தில் 92,205 வழக்குகள் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் 2019 மார்ச் 31 வரை நிலுவையில் உள்ளன. வரி தொடா்பான சச்சரவுகளுக்கு முடிந்த அளவுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டும். வரி வழக்கு தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் மூலம் வரி செலுத்துவோரின் பணம் வெகு நாள்களுக்கு முடங்கி இருக்காது. இது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக இருக்கும். அதேநேரத்தில் நாட்டின் பொருளாதாரத்துக்கும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
வரி குறைக்கும் என்று நம்புகிறேன்:
வீழ்ச்சி வளர்ச்சி விகிதம் மற்றும் பலவீனமான தேவை போன்ற சவால்களுக்கு மத்தியில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கப் போகும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்முறை வரி குறைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவை மற்றும் நுகர்வு அதிகரிக்க இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்கப்படும் என நிறுவனங்கள் நம்புகின்றன. கார்ப்பரேட் வரியில் கணிசமான குறைப்புக்குப் பிறகு, இப்போது தனிநபர் வருமான வரியைக் குறைக்க முடியும் என்று அவர் நம்புகிறார். தனிநபர் வருமான வரி அடுக்குகளில் 2.5 லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தில் ஐந்து சதவீதம் என்ற விகிதத்தில் வரி செலுத்தப்படுகிறது. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20 சதவீதம் என்ற விகிதத்திலும், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமான வரி 30 சதவீதம் செலுத்த வேண்டும்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.