சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது!
இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட ராஜஸ்தான் அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியது. நீண்ட இழுபறிக்கு பின்னர், மூன்று மாநிலங்களுக்கான முதல்வர்களை காங்கிரஸ் தேர்வு செய்து அறிவித்தது.
Chhattisgarh Governor Anandiben Patel administered oath to new state cabinet ministers in Raipur. #Chhattisgarh pic.twitter.com/kjM2Hcf0fU
— ANI (@ANI) December 25, 2018
ராகுல் அறிவிப்பிற்கு பின்னர், சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகெல் கடந்த 17-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அன்றைய தினம் டிஎஸ் சிங் தேவ், தம்ரத்வாஜ் சாகு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், பூபேஷ் பாகல் தலைமையிலான அமைச்சரவையை இன்று அவர் விரிவாக்கம் செய்துள்ளார். ஒரு பெண் எம்எல்ஏ உள்ளிட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராய்ப்பூரின் காவலர் அணிவகுப்பு மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி, 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது