முன்னாள் DSP தேவேந்தர் சிங் மீது UAPA சட்டத்தின் கீழ் NIA குற்ற பத்திரிக்கை தாக்கல்

இந்தியாவுக்கு எதிராக செயல்பட பயங்கராவதிகளுக்கு தேவேந்திர சிங் உதவியதாக NIA விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Last Updated : Jul 6, 2020, 06:08 PM IST
  • எல்லையைத் தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்துவதற்கு தேவேந்திர சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் உதவியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
  • புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள சில அதிகாரிகளுடன் இவர் சமூக ஊடக தளங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்ததாக NIA தெரிவித்துள்ளது.
  • இந்திய குற்றவியல் சட்டம், ஆயுத சட்டம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
முன்னாள் DSP தேவேந்தர் சிங் மீது UAPA சட்டத்தின் கீழ் NIA குற்ற பத்திரிக்கை தாக்கல் title=

UAPA கீழ் ஜம்மு காஷ்மீரின் முன்னாள்  டிஎஸ்பி தேவிந்தர் சிங் மற்றும் 5 பேருக்கு எதிராக NIA  குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது

ஜம்முவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) சிறப்பு நீதிமன்றத்தில் NIA இன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது.

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் (DSP) தேவேந்தர் சிங் மற்றும் அவரது ஐந்து கூட்டாளிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு திங்கள்கிழமை (ஜூலை 6) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தற்போது கதுவாவின் ஹீராநகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவிந்தர் சிங், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி நவேத் முஷ்டாக் என்ற நவேத் பாபு மற்றும் ரஃபி அகமது ஆகியோருடன் தெற்கு காஷ்மீரின் குல்கம் (Kulgam) மாவட்டத்தின் வான்போ (Wanpoh) பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் இருந்து கைது செய்யப்பட்டார். இர்பான் ஷாஃபி மிர், தன்வீர் அகமது வாணி மற்றும் சையத் இஃப்ரான் அகமது ஆகிய மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்.

ஹிஸ்புல் பயங்கரவாதி நவேத் முஷ்டாக் என்ற நவேத் பாபுவுக்கு நிதியளித்ததற்காக தன்வீர் அஹமத் வாணி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய குற்றவியல் சட்டம் IPC யின் 120 பி, 121, 121 ஏ & 122, 1967 ஆம் ஆண்டின் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு UA (P) சட்டத்தின் பிரிவு 17, 18, 18 பி, 19, 20, 23, 38, 39 & 40 ஆகிய பிரிவுகளின் கீழ் மற்றும் ஆயுத சட்டத்தின் பிரிவு 25 (1) (அ) ​​& 35, வெடிமருந்துகள் தடுப்பு சட்டத்தின் பிரிவு 4 & 5 அகியவற்றின் கீழ்  ஜம்முவில் உள்ள NIA சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்-முஜாஹிதீன் மற்றும் பாகிஸ்தான் அரசு அமைப்புகள் இந்தியாவில் வன்முறை  தாக்குதலை நடத்துவதற்கும், இந்தியாவுக்கு எதிராகப் போரிடுவதற்கும் இவர்கள் உதவியதாக NIA விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட தேவேந்தர் சிங் புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள சில அதிகாரிகளுடன் சமூக ஊடக தளங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்ததாக NIA தெரிவித்துள்ளது.

எல்லையைத் தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்துவதற்கு தேவேந்திர சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் உதவியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ஆயுதங்கள் பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டன என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News