விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும்போது இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம் - காத்திருக்கும் பெரிய சிக்கல்!

Chandrayaan-3 Vikram Lander: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து டீபூஸ்டிங் செயல்முறையை வெற்றிகரமாக முடித்த விக்ரம் லேண்டரின் அடுத்த கட்ட செயல்பாடு என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 18, 2023, 06:26 PM IST
  • விக்ரம் லேண்டர் அடுத்த வாரம் புதன்கிழமை நிலவில் தரையிறங்கும்.
  • நிலவின் மேற்பரப்பை விக்ரம் லேண்டர் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
  • அதன் பிரக்யான் ரோவர் அதன் ஆய்வை மேற்கொள்ளும்.
விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும்போது இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம் - காத்திருக்கும் பெரிய சிக்கல்! title=

Chandrayaan-3 Vikram Lander Next Mission: சந்திரயான்-3 விண்கலம் தற்போது நிலவை நெருங்கி வருகிறது. சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து அதன் விக்ரம் லேண்டர் இன்று மாலை 4 மணியளவில் முதல் டீபூஸ்டிங் செயல்முறையை வெற்றிகரமாக செய்தது. சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து நேற்று தனியாக பிரிந்த விக்ரம் லேம்டர், நிலவுக்கு நெருக்கமான சுற்றுப்பாதையில் அதன் பயணத்தை தொடர்வதாக இஸ்ரா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இரண்டாவது டீபூஸ்டிங் செயல்முறை ஆக. 20ஆம் தேதி நடைபெறும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

படம் எடுத்து அனுப்பிய விக்ரம் லேண்டர்

மேலும், விக்ரம் லேண்டர் அடுத்த புதன்கிழமை அன்று நிலவின் மேற்பரப்பை அடையும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விக்ரம் லேண்டர் உந்துவிசை கலனில் இருந்து இன்று பிரிந்த உடனேயே அதன் கேமராக்களால் சந்திரனின் மேற்பரப்பின் முதல் படங்கள் எடுக்கப்பட்டன. பள்ளம் கொண்ட சந்திர மேற்பரப்பை தெளிவாகக் காணலாம். விக்ரம் லேண்டரில் அனைத்து அமைப்புகளும் சரியாக வேலை செய்வதாக இதன்மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள இயலும். 

நிலவில் அடுத்த வாரம்...

நிலவில் அடுத்த வாரம் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதைத் தொடர்ந்து, பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பின் கலவை மற்றும் புவியியல் குறித்த தரவுகளை சேகரித்து, பரந்த அளவிலான ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த ஒரு வாரம் விக்ரம் லேண்டரின் பயணம் எப்படி இருக்கும், அதன்பின் பிரக்யான் ரோவரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு விளக்கியுள்ளார். 

மேலும் படிக்க | சந்திரயான்-3: தொடங்கியது இறுதி ஓவர்... வரலாறு படைக்க போகும் லேண்டர்..!

இஸ்ரோ தலையீடு இருக்காது

அதாவது, சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றபின், அதாவது டீபூஸ்டிங் செயல்பாட்டுக்கு பின் விக்ரம் லேண்டர் லேண்டர் 'தானியங்கி (Automatic) பயன்முறையில்' செயல்படும் மற்றும் தரவுகளின் அடிப்படையிலும், அதன் சொந்த நுண்ணறிவு மூலமும் அடுத்த கட்ட செயல்பாடுகளை எப்படிச் செய்வது என்றும் அதுவே முடிவு செய்யும் என தெரிவித்தார். மேலும், இஸ்ரோவின் தலையீடு இனிமேல் விக்ரம் லேண்டரில் இருக்காது எனவும் அவர் அதில் உறுதிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து விரிவாக பேசிய சிவன்,"அதில் உள்ள சென்சார்கள் மற்றும் பிற அமைப்புகளில் சில தேவைகளுக்கு அதிகமாகவே எப்போதும் இருக்கும், இது கணினியில் கட்டமைக்கப்பட்ட நுண்ணறிவின்படி லேண்டரை வேலை செய்ய அனுமதிக்கும்" என்றார். 

இது ரொம்ப முக்கியம்

தொடர்ந்து, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது குறித்து பேசிய சிவன்,"சுற்றுப்பாதையில் இருந்து அதன் பயணத்தை வரிசைப்படுத்தும்போது, ஒரு நொடிக்கு 2 கி.மீ., வேகத்தில், அது நிலவின் மேற்பரப்பைத் தொடும்போது சரியாக பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட வேண்டும். இது ஒரு நெருக்கடி மிகுந்த மற்றும் முக்கியமான நடவடிக்கை ஆகும்" என்றார். மேலும், நிலவில் விக்ரம் லேண்டர் கால் வைத்து, இரண்டு மணிநேரம் கழித்தபின் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவரும் என்றும் அவர் கூறினார். 

விண்கலத்தின் நிலை எதுவாக இருந்தாலும் அது வெற்றியை உறுதி செய்யும் என்று கூறினார். உந்துவிசை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, எங்கு காணாமல் போனாலும் அதற்கு தீர்வுகாணும் முறையும் சேர்க்கப்பட்டது, இது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் சென்சார்களைக் காப்பாற்ற உதவும், என்றார். குறிப்பாக, ஒரு வலுவான அமைப்பை உருவாக்க சந்திரயான்-2 திட்டத்தில் காணப்பட்ட அனைத்து பிழைகளையும் ஆய்வு செய்து, அதன்மூலம் சந்திரயான்-3 விண்கலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

ஒட்டுமொத்த உலகத்திற்கே பயன்

சந்திரனின் தென் துருவப் பகுதி, 'நிழல் பகுதி' என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது, மேலும் அங்கு சோதனைகள் செய்வதன் மூலம் அறிவியல் ரீதியில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் நோக்கம் குறித்தும் சிவன் நம்பிக்கை தெரிவித்தார். "புதிய அறிவியல்" இந்தியாவிற்கு மட்டுமல்ல, மற்ற நாடுகள் தங்கள் சொந்த சோதனைகளுக்கு தரவுகளைப் பயன்படுத்துவதால் முழு உலகத்திற்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

மேலும் படிக்க | நிலவை நெருங்கும் சந்திரயான்... விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட உள்ள லேண்டர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News