சந்திரயான்-3 திட்டத்தை 2020 நவம்பரில் செயல்படுத்த ISRO திட்டம்!

சந்திரயான்-3 திட்டத்தை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்த இஸ்ரோ திட்டம்!

Last Updated : Nov 14, 2019, 11:02 AM IST
சந்திரயான்-3 திட்டத்தை 2020 நவம்பரில் செயல்படுத்த ISRO திட்டம்! title=

சந்திரயான்-3 திட்டத்தை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்த இஸ்ரோ திட்டம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) சந்திரனில் தரையிறக்கும் இரண்டாவது முயற்சியாக சந்திரயன் 3 திட்டத்தை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஊடக அறிக்கையின்படி, 2020 நவம்பருக்குள் அடுத்த நிலவு பணிக்கான பணிகளை தொடங்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. சந்திரயான் -3 திட்டத்திற்க்கான இஸ்ரோ பல குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுக்களின் உயர்மட்டக் கூட்டங்கள் அக்டோபர் 2019 முதல் நடத்தப்பட்டுள்ளன. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்து செயல்படாமல் போனாலும், அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து சிறப்பான முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சந்திராயன் 3 திட்டம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினர். பின்னர் சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர் நல்ல முறையில் வேலை செய்து வருவதால் தற்போது சந்திரயான் 3ன் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என்றும், மேலும் சந்திரயான் 3ன் மூலம் அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்தச் சூழலிலும் தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்படும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் நிலப்பரப்பின் முப்பரிமாண புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதில் டிஎம்சி-2 என்ற டெரைன் கேமரா, நிலவின் நிலப்பரப்பு முழுவதையும் தெளிவாக படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. நிலவின் பரப்பில் பல்வேறு தாக்கங்களால் உருவாகியிருக்கும் பெரும் பள்ளங்கள், சிறு பள்ளங்கள், முகடுகள் என அனைத்தையும் மிகத் தெளிவாக முப்பரிமாண வடிவில் படம் எடுத்து அனுப்பியிருக்கிறது.

இதன் மூலம், அந்த பள்ளத்தின் ஆழம், அளவு உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு பள்ளம் எப்படி உருவானது, அதன் வயது, தன்மை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.  

 

Trending News