சந்திரயான்-3 குறித்து நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய 5 தகவல்கள்...!

Chandrayaan-3 Must Know These 5 Facts: இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் இன்று நிலாவை சென்று அடைகிறது. இதையொட்டி, இந்த விண்கலம் குறித்து நீங்கள் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்களை பார்க்கலாம்.     

Written by - Yuvashree | Last Updated : Aug 23, 2023, 05:39 PM IST
  • சந்திரயான் 3 இன்று நிலவில் தரையிரங்குகிறது.
  • இந்த விண்கலம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
  • இந்தியா அடுத்து ஜப்பானுடன் சேர்ந்து 2024-25 ஆம் ஆண்டுகளில் இன்னொரு விண்கலத்தை நிலாவிற்கு அனுப்புகிறது.
சந்திரயான்-3 குறித்து நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய 5 தகவல்கள்...!  title=

ஒட்டுமொத்த உலகே, இன்று சந்திரயான் 3 விண்கலத்தின் Moon Landing-ஐ எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளது. இன்று, சரியாக 6:04 மணியளவில் சந்திரயான் 3 விண்கலம் நிலாவில் தரையிரங்க உள்ளது. இதையொட்டி, சந்திரயான் 3 மிஷின் குறித்து நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 

1. சந்திரயான்-1 சந்திரனில் பதிவதை கலாம் உறுதி செய்தார்:

இந்தியாவின் முதல் மிஷினான சந்திரயான் 1, 2008ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தை முதலில், நிலாவின் சுற்று வட்டப்பாதையில் அனுப்பி வைக்கத்தான் வடிவமைத்தனர். ஆனால், மறைந்த விஞ்ஞானியும் முன்னாள் குடியரசு தலைவருமான ஏ.பி.ஜே அப்துல் கலாம் சந்திரயான் 1 கண்டிப்பாக நிலாவிற்கு செல்ல வேண்டும் என்று கூறினாராம். இதனால் சந்திரயான் 1 நிலவில் கால் பதித்த முதல் இந்திய விண்கலமாக மாறியது. 

மேலும் படிக்க | இது தெரியுமா? விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்?

2. சந்திரயான்-2 லேண்டர் ரஷ்யாவில் இருந்து வர இருந்த விண்கலம்:

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் கடந்த சனிக்கிழமை அன்று விழுந்து நொறுங்கியது. இதே போன்ற லேண்டர், இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலத்தில் இணைக்கப்பட இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை.  லேண்டர் மற்றும் ரோவர் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் முதலில் 2011-12 கால கட்டத்தில் செல்லவிருந்தது. அப்போது இந்தியா சொந்தமாக லேண்டர் மற்றும் ரோவரை உருவாக்கவில்லை. இதனால்,  ரஷ்யாவுடன் சேர்ந்து சந்திரயான் 2 விண்கத்திற்கான லேண்டரை இந்தியா தயாரிக்க இருந்தது. இதில், இந்தியா ராக்கெட் மற்றும் ஆர்பிட்டரை வழங்க வேண்டி இருந்திருக்கும். அதே நேரத்தில் லேண்டர் மற்றும் ரோவர் ரஷ்யாவிலிருந்து வந்திருக்கும். இது குறித்து ரஷ்யா அனுப்பிய மாதிரிகளில் பழுது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரஷ்யா இன்னொரு மாதிரி வடிவத்தையும் அனுப்பியது. ஆனால் அது மிகவும் பெரிதாக இருந்ததால் அதை சந்திரயான் 2 விண்கலத்துடன் இணைக்க முடியாமல் போனது.  ரஷ்யா இந்தியாவுடனான லேண்டர் தயாரிக்கும் கூட்டு முயற்சியில் இருந்து பின்வாங்கியது. இதையடுத்து இந்தியாவே தனியாக உருவாக்கிய சந்திரயான் 2 2019ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டது. 

3. அடுத்த விண்கலத்தின் பெயர் சந்திரயான் இல்லை!

பல நாடுகள், தங்கள் நாடுகளில் இருந்து விண்ணிற்கு அனுப்பப்படும் விண்கலங்களுக்கு ஒரே பெயரையே பின்பற்றுகிறது. ஆனால், சந்திரயான் 3 கலத்தை அடுத்து ஜப்பான் உடன் சேர்ந்து ஒரு விண்கலத்தை ஏவ இருக்கிறது. இதர்கு LUPEX என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் 2024-25 காலக்கட்டத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன. 

4. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் லூனா-25ல் இருந்து ஐரோப்பா வெளியேறியது:

ரஷ்யாவின் ரோஸ்கோமோஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முக்கிய உறுப்பினராக ஐரோப்பிய விண்வெளி நிலையம் இருந்தது. இவர்கள் இணைந்து லூனா 25, லூனா 26, லூனா 27 ஆகிய விண்கலங்களை 2030ஆம் ஆண்டிற்குள் விண்ணிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த திட்டங்கள் யாவும் நிறுத்தப்பட்டது. ரஷ்யா, உக்ரைன் போரில் தலையிட்டதுதான் இதற்கு காரணம் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அறிவித்திருந்தது. ரஷ்யா இதையடுத்து அமெரிகாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASAவுடன் கை கோர்த்து திட்டமிட்ட விண்கலங்களை விண்ணில் செலுத்த உள்ளது. 

5.இதுவரை தனியார் நிறுவனங்களின் பாகங்களே உள்ளன...

கடந்த 10 ஆண்டுகளில் பல நாடுகள் நிலாவிற்கு தங்கள் நாட்டின் விண்கலங்களை அனுப்ப முயற்சி செய்தது. சீனா, இஸ்ரெல், இந்தியா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகியவையே அந்த நாடுகள். இதில், சீனா மட்டுமே வெற்றி பெற்றது. இதற்காக இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட விண்கலங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்பட்டவை. இந்த நாள் வரை, நிலாவில் உள்ள விண்கலத்தின் பாகங்கள் தனியார் நிறுவனங்களால் அனுப்பப்பட்டவையாக இருக்கின்றன. 

மேலும் படிக்க | சந்திரயான் நிலவில் தரையிறங்கினால் சொந்தம் கொண்டாட முடியுமா? சர்வதேச சட்டம் சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News