பலாத்காரம் செய்யப்பட 10 வயது சிறுமிக்கு பெண் குழந்தை

Last Updated : Aug 17, 2017, 05:50 PM IST
பலாத்காரம் செய்யப்பட 10 வயது சிறுமிக்கு பெண் குழந்தை title=

சண்டிகார் நகரில் 10 வயது சிறுமி தனது உறவினர் பலமுறை கற்பழிக்கப்பட்டார். ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டபோது, பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக்குறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 

இதனை போலீசார் விசாரித்த போது அந்த பெண்ணின் உறவினரால்(மாமா) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் என தெரியவந்தது. 

சிறுமியை கற்பழித்த உறவினர் போலிசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சிறுமி கர்ப்பமான விசியம் அவருக்கு தெரியப்படுத்தாத நிலையில், கருக்கலைப்பு செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில், இன்று சண்டிகாரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் தாயாரும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த சிறுமிக்கு தனக்கு பெண் குழந்தையை பிறந்த்துள்ளது தெரியாது. அவளுடைய பெற்றோர் அவளிடம் வயிற்றில் ஒரு கல் இருப்பதாகவும், அதற்காக அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது தெரிவித்தனர்.

Trending News