ராகுல் காந்தி டெல்லியில் தான் வசித்து வரும் வீட்டை ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது இந்திய அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக டெல்லியில் உள்ள நம்பர் 12 துக்ளக் லேன் வீட்டில் ராகுல் காந்தி வசித்து வருகிறார். ராகுல் காந்தி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி என்ற பெயரை அவதூறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. கீழமை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருக்கும் இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அவர் தண்டிக்கப்பட்டவுடன் எம்பி பதவியில் இருந்து உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | Rahul Gandhi: 'மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை' - கெத்தாக சொன்ன ராகுல் காந்தி
எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, 20 ஆண்டுகாலமாக வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அரசு, முன்னாள் எம்.பி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராகுல்காந்தி அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மேல்முறையீடு செய்து தண்டனை மாற்றியமைக்கப்படும் நிலையில், அவரின் வீடு காலி செய்யப்பட வேண்டும் என்ற நோட்டீஸ் மேலும் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
ராகுல்காந்தி விவகாரம் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், தற்போது பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களின் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். அதானி தொடர்பாக ராகுல் காந்தி கேள்வி எழுப்புவதை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அரசியல் நோக்கர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் படிக்க | பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ’பாரத் ஜோடோ’ வலுக்கும் கூட்டணி கட்சிகளின் ‘கை’
உண்மையில், ராகுல்காந்தி மீது மேலும் 10 அவதூறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு தானேவில் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி மகாத்மா காந்தியை கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் தொடர்புபடுத்தி பேசியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
ஆனால், ராகுல் காந்தி தன்னை விமர்சனம் செய்தவர்கள் மீது ஒரு அவதூறு வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பரப்புரையின்போது, மாற்றுக் கட்சியினரை தாக்கிப் பேசுவது வழக்கம் என்றாலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ