மத்திய அரசின் புதிய மசோதா; இனி மின் தடைக்கு இழப்பீடு கிடைக்கும்

மின்சார விநியோக சேவையை மேம்படுத்த, நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கும்  மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இனி மின் தடை ஏற்பட்டால், மின் நிறுவனம் உங்களுக்கு இழப்பீடு வழங்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 17, 2021, 01:20 PM IST
  • மின்சார தடை ஏற்பட்டால், மின் நிறுவனம் உங்களுக்கு இழப்பீடு தர வேண்டும்.
  • அரசாங்கத்தின் புதிய மசோதா நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கிறது
  • மின் விநியோக நிறுவனத்தில் சேவைகள் பிடிக்கவில்லை என்றால், மின் நிறுவனத்தை மாற்ற முடியும்.
மத்திய அரசின் புதிய மசோதா; இனி மின் தடைக்கு இழப்பீடு கிடைக்கும் title=

Electricity Amendment Bill 2021: தற்போதுள்ள நிறுவனம் மின் விநியோக சேவைகளை வழங்குவதில் உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தால் அல்லது அவற்றின் சேவைகளில் உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால், இப்போது மின்சார விநியோக  நிறுவனத்தை மாற்றவும், உங்கள் விருப்பப்படி புதிய நிறுவனத்தைத் தேர்வு செய்யவும் உங்களுக்கு  இனி உரிமை கிடைக்கும். ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவைகளில் அதிருப்தி அடைந்தால், மற்றொரு நிறுவனத்திற்கு மாறலாம், மொபைல் போர்டபிளிட்டி வசதியை போலவே இது செயல்படும்.
 
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. இதில், இந்த புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படலாம். மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இந்த தகவலை தெரிவித்தார். இது நடந்தால், அது மின் விநியோகத் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தமாக இருக்கும், இது நுகர்வோருக்கு அதிகாரம் தரும். ஜனவரியில், மின்சார திருத்த மசோதா 2021 க்கான திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வெளியிடப்பட்டது.

அமைச்சரவை ஒப்புதல் 

மின்சார உற்பத்தியைப் போலவே, அதன் விநியோக முறையையும் மேம்படுத்த முன்மொழிந்துள்ளோம் என்று மின்சார துறை அமைச்சர் ஒரு நிகழ்வில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அமைச்சரவை குறிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது, இது அனைத்து அமைச்சகங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும். இது விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று கூறிய அவர், அதை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முன்வைத்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் கூறினார். மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடக்கும் என கூறப்படுகிறது.

ALSO READ | குஜராத்தில் ரயில்நிலையம், ரோபோடிக்ஸ் கேலரியை பிரதமர் திறந்து வைத்தார்

மின்சார நுகர்வோருக்கு நேரடியாக பயனளிக்கும்

இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், தனியார் நிறுவனங்கள் மின்சார விநியோகத் துறையில் நுழைவதற்கான வழிகள் திறக்கும். இது போட்டியை அதிகரிக்கும். இது மின்சார நுகர்வோருக்கு நேரடியாக பயனளிக்கும்.  ஏனெனில் அவர்கள் சிறந்த சேவை வழங்குபவர்களை தேர்ந்தெடுக்கலாம். தற்போது, ​​ஒரு சில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமே மின் விநியோகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

புதிய மின் விநியோக நிறுவனங்கள்

தற்போது மின்சார நுகர்வோர் தங்கள் பகுதியில் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. முன்மொழியப்பட்ட மசோதாவை அறிமுகப்படுத்திய பின்னர், தற்போதுள்ள விநியோக நிறுவனங்கள் தங்கள் சேவைகளைத் தொடரும், ஆனால் மற்ற மின் விநியோக நிறுவனங்களும் அதே பகுதியில் மின் விநியோக சேவையை வழங்க முடியும். 

மின் தடை ஏற்பட்டால் நுகர்வோருக்கு இழப்பீடு 

இந்த மசோதாவில், நுகர்வோருக்கு அதிக அதிகாரம் இருக்கும். ஒரு நிறுவனம் அறிவிக்காமல், நியாயமான காரணம் ஏதும் இல்லாமல் மின்சாரத்தை தடை செய்தால், அந்நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மின் தடை குறித்து  நிறுவனம், நுகர்வோருக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்க இந்த மசோதா வகை செய்யும் என கூறப்படுகிறது.

புதிய நிறுவனங்கள் பதிவு 

மின்சார விநியோகத் சேவையை வழங்க விரும்பும் இத்தகைய நிறுவனங்கள், அவர்கள் மத்திய அரசின் தகுதி நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டு, தங்களை பதிவு செய்ய வேண்டும், நிறுவனம் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால், அவர்கள் பதிவை ரத்து செய்யலாம்.

ALSO READ | நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்த தகவல் வெளியானது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News