ஜிக்னேஷ் மீவானி-க்கு ஆதரவாக போராட்டகளமாக உருமாறிய தலைநகரம்!

புதுடெல்லியில் "யுவா ஹுங்கர் ரேலி" ரத்தானதை அடுத்து, தலைநகரம் போராட்ட களமாக உருமாறியுள்ளது!

Last Updated : Jan 9, 2018, 12:19 PM IST
ஜிக்னேஷ் மீவானி-க்கு ஆதரவாக போராட்டகளமாக உருமாறிய தலைநகரம்! title=

புதுடெல்லியில் "யுவா ஹுங்கர் ரேலி" ரத்தானதை அடுத்து, தலைநகரம் போராட்ட களமாக உருமாறியுள்ளது!

புதுடெல்லியில் இன்று ஜிக்னேஷ் மீவானி பங்கேற்க, நடைபெறவிருந்த கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததினை அடுத்து, டெல்லி காவல்துறையினரை எதிர்து டெல்லியில் போராட்டம் வெடித்துள்ளது.

குஜராத்தில் பாஜக-வை எதிர்த்து சுயேட்சையாக வெற்றிப்பெற்ற ஜிக்னேஷ் மீவானி பங்கேற்க, டெல்லி பாராளுமன்ற சாலையில் இன்று நடைப்பெறவிருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் நேற்றைய தினம் வெளியானது.

முன்னதாக கடந்த ஜன.,4 ஆம் நாள், மும்பையில் ஜிக்னேஷ் மேவானி கலந்து கொள்ளவிருந்த மாநாடுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அனுமதி மறுப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைப்பெற்ற பீமா கொரிகியான் வன்முறை கண்டிப்பு போராட்டத்தினை காவல்துறை முன்வைத்தனர்.

மேலும் நிகழ்ச்சி நடைபெற இருந்த அரங்கத்தில் கூடியிருந்த மாணவர்களையும் காவல்துறையினர் காவலில் வைத்தனர்.

இதற்கிடையில் விஷேம்புபூக் காவல்நிலையத்தில் ஐபிசி பிரிவின் 153 (A), 505 மற்றும் 117 ஆகிய பிரிவுகளின் கீழ் ஜிக்னேஷ் மீவானி மற்றும் காலித் ஆகியோருக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தலைநகர் டெல்லியில், ஜிக்னேஷ் மீவானி-க்கு ஆதரவாக மீண்டும் போர்கொடி எழுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், "இந்த யுவா ஹுங்கர் ரேலி-யை ஜந்தர்மந்தில் தொடங்குவது தொடர்பாக யாரிடமும் ஒருங்கினைப்பாளர்கள் அனுமதி வாங்கவில்லை, எனவே நாங்கள் இந்த யுவா ஹுங்கர் ரேலி-யை வேறு இடத்தில் தொடங்குமாறு தெரிவித்தோம், ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ள வில்லை" என தெரிவித்தார்.

Trending News