பொதுவாக இரவு நேரங்களில் நீண்ட தூரம் காரில் பயணம் செய்யும்போது ஓய்வு எடுக்க இடங்களை தேடுவோம். தூக்கம் வரும் வேலையில் வாகனத்தை நிறுத்துமிடம் நமக்கு ஓய்வோடு சேர்த்து பாதுகாப்பு அளிக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் .
ரோட்டோர பயணியர் நிழற்குடை, உணவகம், டோல் பிளாசா, வெளிச்சம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்துவதைவிட பல மடங்கு பாதுகாப்பானது பெட்ரோல் பங்குகள். CCTV camera அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் கண்டிப்பாக இருக்கும். எனவே மற்ற இடங்களை விட பெட்ரோல் பங்குகள் மிகபெரிய பாதுகாப்பு உடையவை. மற்ற இடங்களில் ஓய்வெடுக்க நிறுத்தும் பொழுது காரின் உள்ளே உள்ள பெண்களின் பாதுகாப்பு, நகை, உடைமை சில நேரம் கார்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. டோல் பிளாசாவில் ஓய்வெடுக்க நிறுத்தினால் டீ விற்பனையாளர், லாரி ஓட்டுநர்கள்னு ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் நிம்மதியாக ஓய்வு எடுக்க முடியாது.
பெட்ரோல் பங்கில் இரவு நேரங்கள்களில் நாம் ஓய்வெடுக்க நிறுத்தகூடாது என்று அதன் உரிமையாளர்கள் சொல்ல மாட்டார்கள் மற்றும் சொல்லவும் கூடாது. பெட்ரோல் பங்குகளில் கார்களை நிறுத்தி ஓய்வெடுக்க நமக்கு உரிமை உண்டு. அதேபோல், நாம் பங்கில் பெட்ரோல் அல்லது டீசல் போடவில்லை என்றாலும் டாய்லெட் மற்றும்Tyre Air கண்டிப்பா இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது அரசாங்க உத்தரவு.
அதே போல் ஓய்வெடுக்கும் பொழுது காரை உள்ள இருந்து லாக் செய்து விட்டு தூங்குவது மேலும் பாதுகாப்பானது. மேலும், கார் நிற்கும் போது ஏசி போட்டு தூங்குவது ஆபத்து. கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து சில சமயம் மரணம் கூட ஏற்படலாம். ஏசி ஆன் செய்து விட்டு தூங்கினால் கட்டாயம் ஜன்னலை சிறிது இறக்கி விடவேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும் ஒரு பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இனி தொலைதூரப் பயணங்களில் ஓய்வெடுக்க பெட்ரோல் பங்குகளை பயன்படுத்துங்கள்.
[Content Credits - Trichy Samar]
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR