பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (டிசம்பர் 20, 2021) பல்வேறு துறைகளின் முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை (CEO) சந்தித்து பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளைக் கேட்டார். கூட்டத்திற்கு பிறகு, தொழில்துறை தலைவர்களின் ஆலோசனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் 2022-23, பிப்ரவரி 1, 2022 அன்று நாடாளுமன்றத்தில் (Budget presentation in Parliament) தாக்கல் செய்யப்படும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கான தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டார். வங்கிகள், உள்கட்டமைப்பு, வாகனங்கள், தொலைத்தொடர்பு துறைகளைச் (Banks, Infrasturcture companies) சேர்ந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் தீவிரமடைந்துள்ளன.
Finance Minister Smt. @nsitharaman will start her Pre-Budget consultations with different stakeholder Groups from tomorrow, 15th Dec 2021 in New Delhi in connection with the forthcoming General Budget 2022-23. The meetings will be held virtually. (1/2)@nsitharamanoffc @PIB_India
— Ministry of Finance (@FinMinIndia) December 14, 2021
நுகர்வோர் பொருட்கள், ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹோட்டல்கள், சுகாதாரம், மின்னணுவியல் மற்றும் விண்வெளித் துறைகள் தொடர்பான முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும் மத்திய அரசு, பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகிறது.
இந்திய நிறுவனங்களும் உலகின் முதல் 5 நிறுவனங்களில் இடம்பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று பிரதமர் மோடி தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டத்தில் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் இந்த கலந்தாலோசனைக் கூட்டம், பட்ஜெட்டுக்கு முன், கார்ப்பரேட் நிறுவனங்களின் அனுபவங்களையும் விருப்பங்களையும் அறிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியாகும்.
ALSO READ | தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது
PLI ஊக்கத்தொகை போன்ற கொள்கைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்திய நிறுவனங்கள், உலகின் முதல் 5 இடங்களுக்குள் வர வேண்டும் என்பதற்கான விருப்பம், ஒலிம்பிக்கில் வெல்வதில் நாம் காட்டும் விருபத்தைப் போல் இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
விவசாயம், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் கார்ப்பரேட் துறையினர் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்துவதன் அவசியம் பற்றி சுட்டுக்காட்டினார்.
பட்ஜெட்டுக்கு முந்தைய ஏற்பாடுகள் தீவிரம்
நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமரின் சந்திப்பு, பட்ஜெட்டுக்கு முந்தைய தயாரிப்புகளின் ஒரு பகுதியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பட்ஜெட் தொடர்பாக தனியார் துறையிடம் இருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்காக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் தொடர்ந்து பேசி வருகிறார்.
பிப்ரவரி 1, 2022 அன்று பட்ஜெட் தாக்கல்
கடந்த வாரம் பங்குச்சந்தை மற்றும் முதலீட்டாளர்களுடனும் பிரதமர் ஒரு சந்திப்பை நடத்தினார், அதில் இந்தியாவை முதலீட்டிற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
2022-23 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1, 2022 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மோடி அரசு பல பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது, உற்பத்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
READ ALSO | ஆதார் அட்டை போலவே தனித்துவமான ஹெல்த் அட்டை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR