Union Budget 2022: மொபைலில் நேரலையாக பட்ஜெட்டை பார்க்க புதிய App அறிமுகம்

Union Budget 2022: பட்ஜெட் 2022ஐ நேரலை மொபைலில் பார்க்கலாம். இதற்காக ஒரு ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 31, 2022, 06:24 PM IST
  • பட்ஜெட் 2022 நேரலையாக மொபைலில் பார்க்கலாம்.
  • இனி நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் நேரலையில்.
  • பட்ஜெட் தக்கதாக்கல் குறித்து புதிய செயலை அறிமுகம்.
Union Budget 2022: மொபைலில் நேரலையாக பட்ஜெட்டை பார்க்க புதிய App அறிமுகம் title=

புதுடெல்லி: இந்த ஆண்டு முதல் அனைவரும் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை மொபைலில் நேரலையில் பார்க்கலாம். நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் நேரலையில் பார்க்கலாம்.

இதற்காக ஒரு ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவை (Parliament of India) சபாநாயகர் ஓம் பிர்லா ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த பயன்பாட்டில் பல முக்கியமான அம்சங்கள் உள்ளன, அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிஜிட்டல் பார்லிமென்ட் ஆப் தொடங்கப்பட்டது
ஓம் பிர்லா தனது ட்விட்டர் பதிவில், “குடியரசின் 73 ஆண்டுகால பயணத்தில் நமது நாடாளுமன்ற அமைப்புகள் தொடர்ந்து செழித்திருக்கின்றன. நமது இறையாண்மையுள்ள பாராளுமன்றம் குடிமக்களை சட்டமியற்றும் முறையுடன் இணைக்க பல முயற்சிகளை எடுத்துள்ளது. தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள், இனி 'டிஜிட்டல் பார்லிமென்ட்' செயலி ('Digital Parliament' app) மூலம், கைப்பேசியிலும் பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

அனைத்து பட்ஜெட் விவாதங்களும் இந்த செயலியில்கிடைக்கும்

'டிஜிட்டல் பார்லிமென்ட்' செயலியில், பார்லிமென்டின் இரு அவைகளின் நடவடிக்கைகள், அவைகளின் அன்றாட அலுவல்கள் பற்றிய தகவல்கள், அவையில் உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் தகவல்கள் என அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் கூறினார்.

1947 முதல் இப்போது வரை பட்ஜெட் மீதான விவாதங்களும் இந்த செயலியில் (Digital Parliament App) கிடைக்கும். இந்த செயலியைப் பதிவிறக்குவதன் மூலம், மக்கள் தங்கள் மொபைல் திரையில் 2022 பட்ஜெட்டை நேரடியாகப் பார்க்கலாம்.

ALSO READ | Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிறைவேற்றுமா அரசு? 

இந்த ஆப் அறிமுகத்திற்கான அவசியம் என்ன?
அரசின் கொள்கை முடிவுகளை மக்களுக்கு தெரியப்படுத்துவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றாலும், பொது நலனுக்காக உறுதியளிக்கும் பொறுப்பும் உள்ளது.  அதே நேரத்தில் அரசாங்கத்தின் பணிகளைப் பற்றிய தகவல்களை வைத்திருப்பது ஒரு பொறுப்பான குடிமகனின் அடையாளம் என்று சபாநாயகர் கூறினார். .

பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல்
இந்த செயலி இலக்கை நிறைவேற்றுகிறது, பாராளுமன்றத்தின் விவாதங்கள் முதல் வரவிருக்கும் பட்ஜெட் (Budget 2022) வரை அனைத்தும் இதில் கிடைக்கும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதை நேரலையில் பார்க்கலாம்.

பட்ஜெட்டுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பார்லிமென்ட் செயலியின் உதவியுடன், பொது பட்ஜெட்டை மக்கள் நேரடியாகப் பார்க்க முடியும். டிஜிட்டல் இந்தியாவின் சகாப்தத்தில் கொண்டு வரப்பட்ட இந்த செயலி ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது. 

இதில் பாராளுமன்ற நடவடிக்கைகளையும் காணமுடியும் என்பதால், மக்கள் தங்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் பேசுவதை நேரடியாக மொபைலில் பார்க்க முடியும்.

ALSO READ | Budget 2022: பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுமா? எதிர்பார்ப்புகள் என்ன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News