Budget 2022 Reaction: ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவுத் திட்டம்!? அவசியம் என்ன?

 ஒரே பத்திரப்பதிவுத்திட்டம் என்று அறிவித்திருப்பதுபோல, அடுத்து வரும் பட்ஜெட்களில் ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என அனைத்தும் மையத்திடம் மையமாகுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2022, 02:42 PM IST
  • ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவுத் திட்டம் சாத்தியமா?
  • மாநில அரசுகளின் வருவாயை பாதிக்கும் திட்டமா இது?
  • மாநில அரசுகளின் அதிகாரத்தை குறைக்குமா மையப்படுத்தப்பட்ட
Budget 2022 Reaction: ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவுத் திட்டம்!? அவசியம் என்ன? title=

புதுடெல்லி: இந்தியாவின் எதிர்வரும் நிதியாண்டிற்கான வரவு செலவு உத்தேச பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சற்று நேரத்திலேயே அதற்கு சாதகமான மற்றும் அனலூட்டும் எதிர்வினைகள் பதிவாகி வருகிறது.

அதில், அனைவரின் ஏகோபித்த எதிர்ப்பையும் பெற்றதாக இருக்கும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது‘ஒரே நாடு, ஒரே பதிவு’ (One Nation, One Registration) என்ற பொறிமுறையை நிறுவுவது தொடர்பான அறிவிப்பு.

பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு, பலரும் நேரிடையாக தாக்கத்தை ஏற்படுத்தும் சாதக பாதகங்களை பற்றி பேசத் தொடங்கினால், நிபுணர்கள் எழுப்பும் சந்தேகங்கள் கவலைகளை ஏற்படுத்துகின்றன.

ALSO READ | பட்டைய கிளப்பும் பங்குச் சந்தை

2022 பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) சுலபமாக தொழில் செய்வது மற்றும் எளிமையாக வாழ்வது குறித்து பேசினார். எளிதாக வாழ்வதற்கும் வணிகம் செய்வதற்கும் ‘ஒரே நாடு, ஒரே பதிவு’ என்ற பொறிமுறையை நிறுவுவது தேவை என்று அவர் தெரிவித்தார்.  

இது தவிர, நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்க 25,000 இணக்கங்கள் (compliances eliminated) நீக்கப்பட்டுள்ளதாகவும், 1,486 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார்.

பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கும் வகையில், அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் ஆன்லைன் பில் செலுத்தும் முறை அறிமுகம் குறித்தும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.  

ALSO READ | Budget 2022 Reaction: பட்ஜெட் மீதான முதல் எதிர்வினைகள்

மேலும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வந்து தொழில் மற்றும் மையங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் .முன்மொழிந்தார்

இந்த புதிய சட்டம் தற்போதுள்ள தொழில்துறை பகுதிகளை உள்ளடக்கும் என்றும், ஏற்றுமதி செய்வதற்கான ஆக்கப்பூர்வமான போட்டித்தன்மையை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.  

தொழில், வணிகம், வருமான வரி விலக்கு என பொதுமக்களின் பல எதிர்பார்ப்புகள் பூர்த்தியானாதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, எதிர்பாராத பல அதிர்ச்சி அறிவிப்புகளும் நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. 

நாடு முழுமைக்குமான ஒரே பத்திரப்பதிவு திட்டம் பல்வேறுவிதமான எதிர்வினைகளைப் பெறுகிறது. 

ALSO READ | விரைவில் இந்தியாவில் Digital Currency! டிஜிட்டல் கரன்ஸி என்றால் என்ன?

தமிழகத்தை பொறுத்த வரை, பத்திரப் பதிவு துறை 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்வதுடன் அரசு நிர்வாகத்திற்கு தேவையான நிதியை திரட்டி தருவதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. .

வருமான வரி கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் பினாமி சொத்துக்கள் விபரம் வெளி வரும். லஞ்சம் குறையும் என்று, நாடு முழுமைக்குமான ஒரே பத்திரப்பதிவு திட்டத்திற்கு சாதகமாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

ஆனால், ஒரே நாடு இந்தியா என்பது சரி, இப்போது ஒரே பத்திரப்பதிவுத்திட்டம் என்று அறிவித்திருப்பதுபோல, அடுத்து வரும் பட்ஜெட்களில் ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என அனைத்தையும் மத்திய அரசின் வசப்படுத்திவிட்டு, மாநிலங்களை டம்மியாக்கும் போக்கு இது எனவும் விமர்சனங்கள் எழுகின்றன.

ALSO READ | 2022-23 மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

இந்த பட்ஜெட், மாநிலங்களின் அதிகாரத்திலும் துண்டு விழச் செய்யும் பட்ஜெட்டாக மாநிலங்கள் பார்க்கும் என்று தோன்றுகிறது. மாநில அரசுகளிடம் ஏற்கனவே பத்திரப்பதிவு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விகளும், அப்படி ஆலோசிக்கப்பட்டிருந்தால், எந்தெந்த மாநிலங்கள் அதற்க்கு உடன்படுகின்றன என்றும் கேள்விகள் எழுகின்றன. 

பட்ஜெட் 2022 குறித்த விமர்சனங்களில் பத்திரப்பதிவு தொடர்பான விஷயம் மிகவும் முக்கியத்துவம் பெறும் என்பது தெரிகிறது.அதையடுத்து, பட்ஜெட்டில் மானியங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு விவகாரமும் பேசுபொருளாகும். 

ஏனெனில், உர மானியம் ₹1.34 லட்சம் கோடியில் இருந்து ₹79,530 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதும், உணவு மானியம் ₹4.2 லட்சம் கோடியில் இருந்து ₹2.4 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டிருப்பதும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

ALSO READ | Union Budget 2022 : பட்ஜெட் உரையின் சில முக்கிய அறிவிப்புகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News