Budget 2022: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கினார். நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என்று பட்ஜெட் தாக்கலின் தொடக்கத்தில் அவர் கூறினார். பிரதமர் கதி சக்தி யோஜனா மூலம் முதலீடு ஊக்குவிக்கப்படும் என்றார் நிதியமைச்சர்.
எல்ஐசியின் ஐபிஓ பற்றிய தகவல்
பட்ஜெட் (Budget 2022) உரையின் போது, எல்ஐசியின் ஐபிஓ (LIC IPO) குறித்த தகவலையும் நிதியமைச்சர் தெரிவித்தார். விரைவில், அதாவது 2022-23 நிதியாண்டில் எல்ஐசியின் ஐபிஓ கொண்டுவரப்படும் என்றார். 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எல்ஐசியின் ஐபிஓ (LIC IPO) குறித்து, மார்ச் இறுதிக்குள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது
முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பொது பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சாமானியர்களின் நம்பிக்கை அதிகமாக உள்ளது
அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னதாக நிதி அமைச்சர் குடியரசுத்தலைவரை சந்தித்தார். அப்போது, அவருடன் நிதித்துறை இணை அமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் காரத், பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் உடன் இருந்தனர். விவசாயிகள், தொழிலதிபர்கள், சாமானியர்கள் என அனைவரும் இந்த பட்ஜெட்டின் மீது பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
நிர்மலா சீதாராமனின் நான்காவது பட்ஜெட்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) நான்காவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்து, பல முக்கிய பதவிகளை வகித்து, தற்போது நிதியமைச்சராகியுள்ளார். கோவிட் -19 (Covid-19) தொற்றுநோய்க்கு மத்தியில், நிர்மலா சீதாராமன் 2021 ஆம் ஆண்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். லண்டனில் உள்ள வேளாண் பொறியாளர்கள் சங்கத்தில் பொருளாதார நிபுணரிடம் உதவியாளராக நிர்மலா பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட், கோவிட் காலத்தில் சாமானிய மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையிலும், தொழிதுறைக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டின் பொருளதாரத்தை நிலைநிறுத்தும் வகையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Budget 2022: ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால் சம்பளம் இரட்டிக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR