Union Budget 2022: இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு முதல், ஆண் பெண் என இரு பாலினருக்கும் பிரத்யேக அம்சங்களை உள்ளடக்கிய பட்ஜெட் செயல்முறை தொடங்கியது. அதன் பின்னர், பெண்கள் சார்ந்த மற்றும் பெண்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு நிலையான பட்ஜெட் ஒதுக்கீடுகள் நடந்து வருகின்றன. இந்த ஒதுக்கீடுகள் மத்திய பட்ஜெட்டின் பாலின பட்ஜெட் அறிக்கையில் (Union Budget's Gender Budget Statement) விவரிக்கப்பட்டுள்ளன. மத்திய பட்ஜெட் நிதியாண்டு முழுவதும் தனிநபர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதால், இதில் பிரத்யேகமான, தெளிவான பாலின முன்னோக்கு இருப்பது மிகவும் முக்கியமாகும்.
பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பெண்கள் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்? எந்தெந்த விதமான முன்னேற்றங்களுக்காக காத்திருக்கிறார்கள்? பெண்கள் உன்னிப்பாக கவனிக்கக்கூடிய முக்கிய அம்சங்கள் என்ன? அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
பட்ஜெட் ஒதுக்கீட்டில் அதிக பங்கு
- 2005-06 ஆம் ஆண்டில், நிதி ஒதுக்கீட்டில் பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முயற்சியாக துவக்கப்பட்ட பாலின பட்ஜெட், மொத்த பட்ஜெட் (Union Budget) செலவினத்தில் 4.8 சதவிகிதமாக இருந்தது. இருப்பினும், பட்ஜெட்டில் அதன் சதவீதம் பல ஆண்டுகளாக ஒப்பீட்டளவில் சராசரியாக 5 சதவீதமாகவே, தேக்க நிலையில் இருந்து வந்துள்ளது. 2021 மத்திய பட்ஜெட்டில் பாலின பட்ஜெட் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- தொற்றுநோய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் விகிதாசார வேலை இழப்புகளைக் கணக்கிட்டால், பட்ஜெட் ஒதுக்கீடு அதற்கு போதுமானதாக இல்லை.
- மேலும், ஊரடங்கு காலத்தில், வீடுகளில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளும் அதிகரித்துள்ள. இவை தவிர, அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதால், மகப்பேறு மற்றும் தாய் சேய் நலப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
- இதன் விளைவாக, பல பெண்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் ஒரு பெரிய பங்கைப் எதிர்பார்க்கிறார்கள்.
- இதை வேறுவிதமாகக் கூறினால், பெண்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கத்தில் பட்ஜெட் ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
சிறப்பு திட்டங்கள்
- தொற்றுநோயின் விளைவாக பல பெண்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். அவர்களின் நீண்டகால சமூகப் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் பெண்களுக்கு முக்கியமானதாக உள்ளது.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்களுக்கன சிறப்புத் திட்டங்களை அறிமுகம் செய்வார் என்ற நம்பிக்கை இந்திய பெண்களிடம் உள்ளது.
- நிதியமைச்சகத்தின் தலைமைப் பொறுப்பில் ஒரு பெண் இருப்பதால், பெண்களின் தேவைகளுக்கு, குறிப்பாக இதுபோன்ற கடினமான காலங்களில் பெண்களின் அதிகரிக்கும் தேவைகளுக்கு, மத்திய பட்ஜெட் அதிக முக்கியத்துவத்தை அளிக்கும், அங்கீகாரத்தை அளிக்கு என்று நம்பப்படுகின்றது.
எதிர்பார்ப்புகள்:
- 80C-யில் (வரி செலுத்துவோரின் மொத்த வருவாயில் இருந்து அதிகபட்சமாக ₹ 1.5 லட்சம் கழிக்க அனுமதிக்கும் பிரிவு) ஒரு சிறப்பு பிரிவை சேர்த்து, அதன் மூலம், அதன் பலன்களை சில ஆண்டுகளுக்கு பெண்களுக்கு வழங்குவது ஏதுவாக இருக்கும். இது அவர்களை அதிகமாகச் சேமிக்க ஊக்குவிக்கும்.
- மற்றொரு வழி, பெண்களுக்கு ஒரு பெரிய நிலையான விலக்கை அளிப்பது.
- இதன் மூலம், குறைவான வரிகளின் காரணமாக பெண்களின் கையிருப்பில் அதிக பணம் இருக்கும்.
- இதனால், குறைந்தபட்சம், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கோவிட்-19 (COVID-19) இழப்புகளை பெண்களால் ஈடுசெய்ய முடியும்.
ALSO READ | Budget 2022: சாமானியர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள்: நிறைவேற்றுமா அரசு?
டிஜிட்டல் பாகுபாட்டைக் குறைப்பது
- வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டபோது, கல்வித் துறையில் இருக்கும் மிகப்பெரிய டிஜிட்டல் பிளவை தொற்றுநோய் கோடிட்டுக் காட்டியது. அனைத்து வயது பெண்களிடையேயும் டிஜிட்டல் கல்வியறிவை அதிகரிப்பதற்கான திட்டங்களைச் சேர்ப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.
- மேலும், திறன் வளர்ப்புப் பட்டறைகள் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சித் திட்டங்களை அரசின் கீழ் அறிமுகப்படுத்துவது, சத்தியமான தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த உதவும்.
- மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கோவிட் -19 கேசலோடின் கீழ் இணைக்கப்பட்டதால், பல சுகாதார சேவைகளும் ஆன்லைனில் மாறின. பெண்கள் தங்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் ஆரோக்கியம் தொடர்பான முடிவுகளில் முக்கிய பங்காற்ற, தேசிய சுகாதாரத் திட்டத்தின் பட்ஜெட்டை அதிகரிப்பது மிகவும் முக்கியமானதாகிறது.
பெண் தொழில்முனைவோருக்கான கொள்கைகள்
- 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தின் கீழுள்ள கொள்கைகள் மூலம் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பது, இதற்கான முயற்சிகளை எடுப்பது ஆகியவை மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க நடவடிக்கைகளாக இருக்கும்.
பாலினப் பிரிவைக் குறைத்தல், மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் மகப்பேறுக்கு முந்திய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட வணிகங்களுக்கான வரிகளைக் குறைப்பதும், சிறப்புத் திட்டங்களை அறிமுகம் செய்வதும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திசையில் ஒரு நல்ல படியாக இருக்கலாம்.
விருப்பமான முதலீடுகள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கலாம்
நாட்டில் உள்ள டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் உள்ள பெண்களுக்கு தங்கம் மிகப்பெரிய முதலீட்டு கருவியாக உள்ளது. தங்கம் போல பெண்கள் ஆர்வத்தை கவரும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை மேலும் குறைப்பது, தங்கள் முதலீடுகளின் மீது பெண்களுக்கான கட்டுப்பாட்டையும் சுயாதீனத்தையும் அதிகரிக்கும்.
ALSO READ | பைக்-ஸ்கூட்டி வாங்க திட்டமா; பட்ஜெட்டுக்கு முன் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR