பட்ஜெட் 2020: இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது

பட்ஜெட் (Budget 2020) அறிமுகப்படுத்தப்படஉள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது.

Last Updated : Feb 1, 2020, 09:57 AM IST
பட்ஜெட் 2020:  இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது title=

பட்ஜெட் (Budget 2020) அறிமுகப்படுத்தப்படஉள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிந்து 40,444 ஆக குறைத்து. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 81 புள்ளிகள் சரிந்து 11,880 ஆக குறைந்தது. 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் (Budget 2020) செய்ய உள்ளார். ஒட்டுமொத்த தேசத்தின் கண்களும் இன்று நிதியமைச்சர் மீது இருக்கும். வணிக உலகில் இருந்து சாமானியர்கள் வரை அனைவரும் தங்கள் பட்ஜெட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில்  மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 140 புள்ளிகள் குறைந்து 40,576 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை நிஃபடி 126 புள்ளிகள் சரிந்து 11,910 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

 

 

கடந்த ஜனவரி 30 ஆம் தேதி பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் நிலவியதாக வல்லுநா்கள் தெரிவித்தனா். சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், மத்திய பட்ஜெட் தொடர்பான எதிர்ப்பார்ப்புகள் போன்றவையும் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

சர்வதேச பங்குச் சந்தைகளில் ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா பங்குச் சந்தைகள் இழப்பைச் சந்தித்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியுடன் தொடங்கின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசாக்கள் குறைந்து ரூ.71.51 ஆக இருந்தது. 

இந்நிலையில் தற்போது இன்று காலை நிலவரபடி பங்கு சந்தை வர்த்தகம் சரிந்து தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குசந்தை சரிவு கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடாந்துள்ளனர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News