இளைஞர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் பட்ஜெட் இது: மோடி

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன என பிரதமர் மோடி பெருமிதம்!

Last Updated : Jul 5, 2019, 03:05 PM IST
இளைஞர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் பட்ஜெட் இது: மோடி title=

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன என பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் முதல் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அதில், நடுத்தர மக்களுக்கு பயன் பெரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்திருந்தார். 

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில்;  மக்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் தோழமையான அம்சங்கள் அடங்கி இருப்பதாக இந்த நிதிநிலை அறிக்கை விளங்குகிறது என தெரிவித்தார். 

புதிய இந்தியாவுக்கான இந்த பட்ஜெட்டில் நாட்டின் வேளாண்மைத்துறையை மாற்றியமைப்பதற்கு தேவையான தொலைநோக்கு திட்டம் உள்ளதால் இது எதிர்ப்பார்ப்பு மற்றும் நம்பிக்கைகுரிய பட்ஜெட்டாகும். ஏழைகள் பலமடைவார்கள். இளைஞர்கள் பலன் பெறுவார்கள். 

பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் பசுமைசார்ந்த எரிசக்தி ஆகியவற்றுக்கான காரணிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் மூலம் மத்தியத்தர வருமானம் கொண்ட பிரிவை சேர்ந்த மக்கள் முன்னேற்றம் அடைவார்கள். முன்னேற்றத்துக்கான பணிகள் விரவாக செயல்படுத்தப்படும். வரிவிதிப்பு முறைகள் எளிமையாவதுடன் உள்கட்டமைப்பு வசதிகளும் நவீனப்படுத்தப்படும் எனவும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

 

Trending News