வாரணாசியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனும் மணமகளும் வெங்காயம் மாலைகளை மாற்றிக் கொண்டனர்.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருக்கிறது.
சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 150 ரூபாயையும் தாண்டியது. இதனால் வெங்காய வரத்து இல்லாததால் எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவு வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
UP: Bride and groom exchange garlands of onion, garlic
Read @ANI story | https://t.co/6uQiIbQIe2 pic.twitter.com/9Y5d5Xcmgo
— ANI Digital (@ani_digital) December 13, 2019
இந்நிலையில் உத்தரபிரதேச மாநில வாரணாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனும் மணமகளும் வெங்காயம் மற்றும் பூண்டு மாலைகளை மாற்றிக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.