ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது! ஜாமீனில் வெளிவரமுடியாது

Corruption Arrest: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் சிஐடி அதிகாரிகளால் இன்று (2023, செப்டம்பர் 9, சனிக்கிழமை) கைது செய்யப்பட்டார் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 9, 2023, 09:13 AM IST
  • ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது பின்னணி
  • ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் கைது
  • சிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட என்.டி.ஆர் மருமகன்
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது! ஜாமீனில் வெளிவரமுடியாது title=

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் சிஐடி அதிகாரிகளால் இன்று (2023, செப்டம்பர் 9, சனிக்கிழமை) கைது செய்யப்பட்டார். நாயுடு மீது போடப்பட்ட பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) 2021 இல் பதிவு செய்யப்பட்டது.

மருத்துவப் பரிசோதனைக்காக சந்திரபாபு நாயுடு நந்தியால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரபாபு நாயுடுவுக்கு சனிக்கிழமை அதிகாலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 50 (1) (2) கீழ் கைது வாரண்ட் வழங்கப்பட்டது. அப்போது அவர், நந்தியாலா நகரில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, தனது வேனிட்டி வேனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க | சீனாவின் ஆக்ரமிப்பை கண்டிக்க வேண்டும்! ஜி20யில் விவாதம் கோரி போராடும் திபெத் அகதிகள்

நாயுடு மீது போடப்பட்ட பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாதவை

இந்த வழக்கு தொடர்பாக, அனைத்து விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சந்திரபாபு நாயுடு காவல்துறைக்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டார். அவர் அவரது வாகனத்திலேயே வருவதற்கு அனுமதிக்கப்பட்டது. தான் விரைவில் கைது செய்யப்படலாம் என்று சந்திரபாபு நாயுடுவே சமீபத்தில் கூறியிருந்தார்.

வெள்ளிக்கிழமை, ஆந்திரப் பிரதேச சமூக நலத்துறை அமைச்சர் மெருகா நாகார்ஜுனா, பொதுப் பணத்தைக் கொள்ளையடித்ததற்காக சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்யக் கோரினார். தாடேபள்ளியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஐதராபாத்தில் உள்ள லேக் வியூ விருந்தினர் மாளிகையை பழுதுபார்ப்பதற்காக ரூ.10 கோடி செலவழித்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றம் சுமத்தினார்.

மேலும் படிக்க | முதல் முறையாக இந்தியா வந்துள்ள ஜோ பிடன்! பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை!

மேலும் ரூ.10 கோடியை முதல்வர் அலுவலகத்திற்கு செலவு செய்தார். சார்ட்டட் விமானங்களுக்கு ரூ.100 கோடியும், தர்ம போராட்ட தீக்ஷாக்களுக்கு ரூ.80 கோடியும் என அவர் அரசாங்கத்தின் பணத்தை அநாவசியமாக செலவழித்தார் என்று நாயுடு மீது குற்றம் சாட்டப்பட்டது.

"எங்கள் முதல்வர் அவரைப் போல் பொதுப் பணத்தை வீணாக்கவில்லை, ஆனால் நேரடிப் பலன்கள் மூலம் மக்கள் கணக்குகளில் 2.31 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளார்," என்று ஆந்திரப் பிரதேச சமூக நலத்துறை அமைச்சர் மெருகா நாகார்ஜுனா சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க | வேருடன் அழிக்கப்படுவார்கள்... காலிஸ்தானி தீவிரவாதம் குறித்து ரிஷி சுனக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News