Breaking: டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு! விரைந்து பரவும் நோய்த்தொற்று?

Delhi registered First Monkeypox case: டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதியாகிருப்பதை அடுத்து, இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2022, 11:54 AM IST
  • குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு
  • டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி
  • 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 14,000 உறுதிப்படுத்தப்பட்ட குரங்கு பாக்ஸ் தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளது
Breaking: டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு! விரைந்து பரவும் நோய்த்தொற்று? title=

புதுடெல்லி: டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குரங்கு அம்மை நோய்ப் பரவலை "உலகளாவிய சுகாதார அவசரநிலை" என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல காரணங்களுக்காக உலகளாவிய குரங்கு அம்மை நோய் பரவல், பொது சுகாதார அவசரநிலையை பிரதிபலிக்கிறது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் ஒருவருக்கு நோய்த்தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் முதன்முதலாக ஒருவருக்கு குரங்கம்மை நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 31 வயதான நோயாளி ஒருவர், காய்ச்சல் மற்றும் தோல் புண்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதியாகிருப்பதை அடுத்து, இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குரங்கம்மை காய்ச்சல் இருப்பது உறுதியானது. குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், வெளிநாடுகளுக்கு பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 

70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 14,000 உறுதிப்படுத்தப்பட்ட குரங்கு அம்மை தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆப்பிரிக்காவில் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. 

சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே குரங்கம்மை நோய்த் தொற்று தலைநகரில் பதிவாகியுள்ளது.  தொற்றுநோய்க்கான தயார்நிலை ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் அண்மை மதிப்பீட்டின்படி, குரங்கு அம்மை நோய் அபாயம் உலகளவில் மிதமானதாக இருக்கும் என்றும், சர்வதேச அளவில் பரவுவதற்கான ஆபத்து இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, உலக நாடுகள் அனைத்தும் நோய்த்தொற்றை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் இந்தியத் தலைநகரில் தொற்று உறுதியாகியிருப்பதும், அவர், இளைஞர் என்பதும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்பதும் கவலைகளை அதிகரிக்கிறது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டால், ஏற்கனவே நாட்டில் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்குமோ என்ற அச்சங்களும் எழுகின்றன.

மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News