தமிழில் இந்தியன் 2, அயலான், தீரன் அதிகாரம் ஒன்று உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். சமீபத்தில் தான் இவர் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துகொண்டார். ரகுலின் சகோதரர் தான் அமன் பிரீத் சிங். இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில் நரசிங்கியில் உள்ள ஹைதர்ஷாகோட்லாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கம் போல் நடத்திய ரெய்டில் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 199 கிராம் கோகைன், 2 பாஸ்போர்ட், 2 பைக், 10 செல்போன்கள் உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்போது போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக அமன் பிரீத் சிங் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க | அம்பானி மகன் கல்யாண செலவு இத்தனை கோடிகளா? வாய்பிளக்கும் மக்கள்!
அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்த போது அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் போதைப்பொருள் விற்பனை செய்தது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையை அடுத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சில வெளிநாட்டினரும் அடங்குவர். அதில் ரகுல் பிரீத் சிங் சகோதரரும் ஒருவர். அமன் பிரீத் சிங் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று ஐதராபாத் போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஏற்கெனவே ரகுல் பிரீத் சிங்கிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தி இருந்தனர்.
Actress Rakulpreet Singh's brother Amanpreet Singh has been arrested in a drugs case. Telangana Anti Narcotics Bureau had raided a flat.#RakulPreetSingh #AmanPreetSingh #Telangana #SuhanaKhan #NitaAmbani pic.twitter.com/16U1DKgS0F
— Shakiv Ansari (@Shakivansari5) July 15, 2024
இதுகுறித்து ரகுல் பிரீத் சிங்கிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கினர். இதன்பிறகு ரகுலின் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. தெலுங்கில் நம்பர் 1 இடத்தில் இருந்த ரகுல் பிரீத் சிங் அப்படியே காணாமல் போனார். தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட அமன் பிரீத் சிங்கும் படங்களில் நடித்து வருகிறார். அவர் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் போதைபொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகியுள்ளது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருளுக்கு இரையாக வேண்டாம் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளைக் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தயங்காமல் காவல்துறையை அணுகவும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெலுங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ