கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான சந்தைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க பி.எம்.சி அத்தகைய முடிவை எடுத்துள்ளது.
நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையில், பிரஹன் மும்பை மாநகராட்சி (BMC) மாற்று நாளில் அல்லது ஒரு நாள் இடைவெளியில் கடைகளை திறக்க உத்தரவு பிறப்பித்தது. கொரோனா வைரஸைத் (Coronavirus) தடுப்பதற்காக சந்தைகளில் கூட்டத்தைக் குறைக்க BMC இந்த முடிவை எடுத்துள்ளது.
BMC -ன் இந்த உத்தரவுக்குப் பிறகு, முந்தையதை விட மும்பை சந்தைகளில் ஒவ்வொரு நாளும் 50 சதவீத கடைகள் மட்டுமே திறக்கப்படும். மும்பையின் இந்த பகுதிகளில் வாரத்தில் 7 நாட்கள் பி.எம்.சி உத்தரவு நடைமுறையில் இருக்கும் மற்றும் மாற்று நாளில் கடைகள் திறக்கப்படும்.
முழு நாட்டிலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது, இதில் அதிகபட்ச விளைவு மகாராஷ்டிராவில் காணப்படுகிறது.