குஜராத் பேருந்தில் திடீர் தீ விபத்து!

குஜராத் தனியார் பேருந்து ஒன்றில் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

Last Updated : Jan 4, 2018, 10:21 AM IST
குஜராத் பேருந்தில் திடீர் தீ விபத்து! title=

குஜராத் மாநிலத்தின் தனியார் பேருந்து ஒன்றில் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் நேற்று இரவு தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குஜராத் மாநிலத்தின் அருகே உள்ள டோகாஜி பிகி ரோட்டில் ஏற்பட்டுள்ளது.

திடீர்ரென பேருந்து கொழுந்து விட்டு எரிந்ததால் தொடர்ந்து புகை வெளியேறிக்கொண்டிருந்தது, பின்பு கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர். பின்னர் சம்பவயிடத்திற்கு வந்த 4 தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும், இந்த தீ விபத்தில் காயங்கள் மற்றும் சேதங்கள் இல்லை எனவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News