Rameshwaram Cafe Bomb Blast Case: பெங்களூரு ஒயிட் பீல்ட் சாலையில் குந்தலஹாலியில் உள்ள பிரபலமான உணவகம் ராமேஸ்வரம் கபே. இந்த உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி மதியப்பொழுதில், 10 வினாடிக்குள் இரண்டு முறை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு விசாரணையை தேசிய விசாரணை முகமை (NIA) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
தேசிய விசாரணை முகமை அதிகாரிகள் இதுவரை சம்பவ இடத்தை சுற்றியுள்ள 500க்கும் அதிகமான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் குண்டு வைத்து விட்டு, பி.எம்.டி.சி அரசு பேருந்தில் பயணம் செய்த வீடியோவும், துமகூர் வழியாக பெல்லாரி சென்ற வீடியோவும் வெளியானது.
என்ஐஏ தொடர் விசாரணை
இதையடுத்து பெல்லாரியில் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அங்கு கிடைத்த தகவல் அடிப்படையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து கடந்த வாரம், கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் தீர்த்தஹள்ளி, சோப்பு குட்டே, இந்திரா நகர், பெட்டமக்கி உள்ளிட்ட 5 இடங்களில் ஷாரிக், மாஜ் முனீர், மதீன் தாஹ் ஆகியோருக்கு சொந்தமான வீடு, கடைகளிலும்,
அதேபோல் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
பாஜக நிர்வாகி கைது
இதில் தீர்த்தஹள்ளி விசாரணை வளையத்துக்குள் வந்த இரண்டு இளைஞர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி பாஜக நிர்வாகி சாய் பிரசாத்திடம் (BJP Worker Sai Prasad Arrested) தற்போது தேசிய விசாரணை முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொந்தளிக்கும் காங்கிரஸ்
தற்போது பாஜக நிர்வாகி சாய் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் அக்கட்சி மீது கடுமையாக சாடி வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் குண்டு ராவ் அவரது X தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில்,"பாஜக தொண்டர் ஒருவரை என்ஐஏ கைது செய்திருப்பது ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் பாஜகவின் தலையீட்டைக் குறிக்கிறது அல்லவா...?
மதப் பாதுகாப்பு என்ற பெயரில் பாஜக பரப்பும் காவி தீவிரவாதம் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இதைவிட தெளிவான ஆதாரம் இருக்கிறதா என்ன... ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை நாடு முழுவதும் அமல்படுத்தும் மத்திய பாஜக இதற்கு என்ன பதில் சொல்கிறது?" என குறிப்பிட்டுள்ளார்.
2 பேரை தேடி வரும் என்ஐஏ
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான பாஜக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், தற்போது பாஜக நிர்வாகி கைதாகியிருப்பதன் மூலம் அக்கட்சி தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தினேஷ் குண்டு ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, முஸ்ஸாவிர் ஹுசைன் ஷாசிப் என்ற ஷாஸெப் மற்றும் அப்துல் மதீன் தாஹா என்ற அப்துல் மதீன் தாஹா ஆகிய இருவரை இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவித்து தேடி வருகின்றனர். இவர்களை கைது செய்ய துப்புக் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக என்ஐஏ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | A டூ Z.. கொடி பறக்குது! காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் பட்டியல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ