Lok Sabha Election Result 2024: 18வது மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் இருந்தால்போதும் என்றாலும் பாஜகவும் சரி, காங்கிரஸ் கட்சிக்கும் சரி தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றே தோன்றுகிறது. எனவே, கடந்த இரண்டு முறை போல் இல்லாமல் இந்த முறை கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பிருக்கிறது.
பாஜக முன்னணியில் இருக்கும் பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதில் இருந்து 50 தொகுதிகளுக்கும் மேல் இந்தியா கூட்டணி பக்கம் திரும்ப வாய்ப்பிருக்கிறது என்றும் கணிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களிலும், இந்திய கூட்டணி 233 தொகுதிகளும் மற்றவர்கள் 20 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கும் இடையே சிறிய அளவிலான வாக்கு வித்தியாசம் மட்டுமே இருக்கிறது.
இது அடுத்தடுத்த சுற்றுகளில் மாற வாய்ப்பு இருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த 20 நிமிடங்களில் 294 இடங்களாக இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது 290 இடங்களாக குறைந்திருக்கிறது. அதே வேளையில் 228 இடங்களில் இருந்த இந்திய கூட்டணி 233 இடங்களுக்கு உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சில தொகுதிகளில் மட்டும் வெற்றி நிலவரங்கள் வெளியாகி உள்ளது.
அதில், பாஜக இதுவரை 17 இடங்களை வென்றிருப்பதாகவும், காங்கிரஸ் மற்றும் மற்றவை தலா 3 இடங்களை வென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, அடுத்தடுத்து வெற்றி நிலவரங்கள் வெளிவரும் என்பதால் இன்று மாலைக்குள் ஆட்சி யார் பக்கம் என்பது தெரிந்துவிடும். அதில் இந்த 50 தொகுதிகள் முக்கிய பங்காற்றும் எனலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ