புது டெல்லி: 2018-19 ஆம் நிதியாண்டில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த வரவு-செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 2018-19 ஆம் ஆண்டு நிதியாண்டில் பாஜகவின் வருமானம் முந்தைய ஆண்டைவிட 134 சதவீதம் அதிகரித்து ரூ.2,410 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு பாஜகவின் (Bharatiya Janata Party) வருமானம் ரூ.1,027 கோடியாக இருந்தது. தற்போது 2019- 20 நிதியாண்டில் ரூ. 3,623 கோடியாக உயர்ந்துள்ளது என தனியார் செய்தி நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாஜகவின் மொத்த வருவாயில் ரூ.1,450 கோடிக்கு மேல் தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் வந்துள்ளதாக பாஜக தரப்பு தெரிவித்திருந்தது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 3,355 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. இதில், 76% நன்கொடை பாஜகவுக்கு சென்றுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் இந்தத் தொகை ரூ. 210 கோடியாக இருந்தது. பாஜக தனது தேர்தல் செலவினத்தின் ஒரு பகுதியாக விளம்பரங்களுக்காக 400 கோடிக்கு மேல் செலவழித்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மற்றொரு தேசிய கட்சியான காங்கிரசின் (Congress) வருமானம் 25 சதவீதம் சரிந்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.918 கோடி எனக் கூறியிருந்தது. 2019- 20 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் 9 சதவீதம் நன்கொடை மட்டுமே கிடைத்துள்ளது.
தமிழகத்தில் திமுகவை (Dravida Munnetra Kazhagam) பொறுத்த வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ .45 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
ALSO READ | TN Budget 2021-22: ஆக.13 முதல் செப். 21 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR