இன்று கட்சியில் இணைந்த நடிகர் சன்னி தியோல் பாஜக சார்பில் குருதாஸ்பூரில் போட்டி

இன்று பாஜக-வில் இணைந்த நடிகர் சன்னி தியோல், அக்கட்சியின் சார்பில் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 23, 2019, 10:21 PM IST
இன்று கட்சியில் இணைந்த நடிகர் சன்னி தியோல் பாஜக சார்பில் குருதாஸ்பூரில் போட்டி title=

புது தில்லி: பா.ஜ.க., மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 26-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிரடி ஹீரோ சன்னி தியோல் குருதாஸ்புரில் போட்டியிடுகிறார். இவர் இன்று தான் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பட்டியலில் இரண்டாவது பெயர் கிரன்கேர். இவர் சண்டிகரில் மீண்டும் போட்டியிடுகிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மூன்றாவது பெயர் பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் தொகுதியில் சோம் பிரகாஷ் போட்டியிடுகிறார் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக இன்று டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் நடிகர் சன்னி தியோல் பா.ஜ.க-வில் இணைந்தார். பின்னர் செய்தி ஊடகத்திடம் பேசியபோது, "என் தந்தை அடல்ஜி உடன் தொடர்பு கொண்டிருந்தார், இன்று நான் மோடி ஜி உடன் இணைந்து பணியாற்ற வந்துள்ளேன். இந்த குடும்பத்திற்கு நான் என்னவெல்லாம் செய்ய முடியுமோ.. நான் செய்வேன். நான் அதிகமாக பேசுவதில்லை. என்னுடைய கடமையை நான் என் வேலையில் காண்பிப்பேன்." எனக் கூறினார்.

Trending News