12:33 PM · Aug 1, 2019
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சென்கர் கட்சியில் இருந்து நீக்கம்!
MLA Kuldeep Singh Sengar (Unnao rape accused) has been expelled from BJP. pic.twitter.com/GTBqkswRR1
— ANI (@ANI) August 1, 2019
உன்னாவ் பாலியல் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உன்னாவ் லாரி விபத்து தொடர்பாக சி.பி.ஐ. இயக்குனருடன் ஆலோசிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவுரை வழங்கியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் புகார் கூறிய இளம் பெண் கார்விபத்தில் சிக்கிய வழக்கை ஏற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள் உன்னாவோ தொகுதி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் மீது பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவருடைய கூட்டாளிகள், அடியாட்கள் உள்ளிட்ட 30 பேர் மீதும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது. பெண்ணை கடத்திச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்தது, அவரை கொல்ல முயற்சித்தது, காரில் சென்ற போது விபத்தை ஏற்படுத்தியது எல்லாமே எம்.எல்.ஏவின் கைவரிசைதான் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேபரேலி அருகே அந்தப் பெண்ணின் கார் மீது லாரி மோதியதில் இரண்டு உறவினர்கள் உயிரிழந்தனர்.
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். அவருடைய வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், உன்னோவ் பாலியல் வழக்கின் நிலை பற்றி சிபிஐ அதிகாரி நண்பகல் 12 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உன்னோவ் பாலியல் விவகாரம் தொடர்பான 4 வழக்குகளை உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு உச்ச நீதிமன்றம் மாற்றலாம் எனவும் தெரிகிறது.