சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த உறவினர்... 10 கிலோ உப்பைக் கொட்டி உடல் அழிப்பு!

தனது மூத்த சகோதருக்கும், உறவினர் சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்ட நிலையில், இளைய சகோதரர் அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 23, 2022, 07:11 AM IST
  • நவம்பர் 16ஆம் தேதி சிறுமி கொலைசெய்யப்பட்டார்.
  • நவம்பர் 25ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • சுமார் ஒருமாதத்திற்கு பின், டிச. 22ஆம் தேதி குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த உறவினர்... 10 கிலோ உப்பைக் கொட்டி உடல் அழிப்பு! title=

பிகார் தலைநகர் பாட்னாவில் ஒரு கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாட்னாவின் ஜானிபூர் பகுதியில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். அந்த பெண் குறித்து நடந்த விசாரணையில், நேற்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி திடுக்கிட வைத்தன. 

அர்வால் பகுதியை சேர்ந்த அந்த சிறுமிக்கும், ஜெகனாபாத்தில் இருந்த அவரின் உறவினருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த உறவினர், சிறுமியை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனக்கூறி திருமணத்தை நிறுத்திவிட்டார். அந்த உறவினரின் இளைய சகோதரன் பெயர் விஜேந்தர் குமார். 

திருமணம் நின்றுபோனதை அடுத்து, அந்த சிறுமியுடன் விஜேந்தர் குமார் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் அடிக்கடி போனில் பேசிவந்தனர். விஜேந்தர் குமாருக்கும் அந்த சிறுமி உறவினர் என்றாலும், விஜேந்தரை விட இளையவராக இருந்துள்ளார். 

மேலும் படிக்க | தோல்வி அடைந்த காதல் திருமணம் ! மச்சினியுடன் ஓடிப் போன மாப்பிள்ளை!

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கடந்த நவம்பர் 25ஆம் தேதியில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.  அந்த வகையில், கடந்த நவம்பர் 16 அன்று, விஜேந்தர் சிறுமிக்கு போன் செய்து, அர்வால் பஜாரில் தன்னை வந்து சந்திக்க அழைத்துள்ளார். 

இதையடுத்து, சிறுமியும் அங்கு செல்ல அவரை ஜெகனாபாத்தில் உள்ள ஓட்டலுக்கு விஜேந்தர் அழைத்துச்சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த விஜேந்தர்,  அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட விஜேந்தர், சிறுமியை ஹோட்டலிலேயே கொன்றுவிட்டு, பாட்னாவின் ஜானிபூரில் ஆள் நடமாட்டம் இல்லாத புதர் நிறைந்த இடத்தில் அவரது உடலைப் புதைத்ததாக போலீஸிடம் கூறினார். உடலை அடக்கம் செய்வதற்கு முன், 10 கிலோ உப்பை சிறுமியின் உடல் மீது ஊற்றியதாக தெரிவித்துள்ளார். அதாவது, உப்பை கொட்டினால் அவரது உடல் விரைவாக அழுகும் என்றும், உடலை அடையாளம் காண்பது கடினம் என்றும் கூறியுல்ளார். 

உயிரிழந்த சிறுமி காணாமல் போனதையடுத்து, குடும்பத்தினர் அர்வால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளியும், சிறுமியும் போனில் அடிக்கடி பேசுவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

பின்னர், அர்வால் போலீஸார், ஜானிப்பூர் காவல் நிலையத்தின் உதவியுடன் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அழுகிய நிலையில் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | எச்சரிக்கை - மாஸ்க் போடுங்க... சுற்றுலா போகாதீங்க... மீண்டும் மிரட்டும் கொரோனா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News