2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. சமீபத்திய முன்னிலை நிலவரங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என கூற வேண்டும். எளிதில் பெரும்பான்மை வலுவை எட்டுவோம் என்று கூறி வந்த பாஜக, இப்போது மிக பெரிய கட்சியாக மட்டுமே உருவெடுத்துள்ளது. முந்தைய தேர்தல்களில், பாஜக தனிகட்சியாக பெரும்பான்மை பெற்ற நிலையில், இப்போது பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்தே பெரும்பான்மை வலுப்பெரும் நிலையில் உள்ளது. மாலை வரை இதே நிலை நீடித்தால் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கக் கூடும். எனினும், இந்த முறை கிங் மேக்கராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உருவாகலாம் என நம்பப்படுகிறது.
மக்களவை தேர்தலில் சமீபத்திய முன்னணி நிலவரம் குறித்து கூறுகையில், பாரதிய ஜனதா கட்சி தற்போது 243 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இந்த எண்ணிக்கை சிறிது மாறலாம். சமீபத்திய தரவுகளின், NDA என்னும் தேசிய ஜனநாயக கூட்டணி 297 இடங்களிலும், இந்தியா கூட்டணி 231 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதாவது இரு தரப்பிலும் மிக நெருக்கமான போட்டி நிலவுகிறது.
நிதீஷின் பங்கு என்னவாக இருக்கும்?
சமீபத்திய தரவுகளின் படி, பீகாரில் 15 மக்களவைத் தொகுதிகளில் நிதிஷ் குமாரின் கட்சி ஜனதா தளம் முன்னணியில் உள்ளது. அதே சமயம் மாநிலத்தில் 13 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் இழுபறி என்றால், 15 எம்.பி.க்களுடன் கிங் மேக்கராக நிதீஷ் குமார் உருவாகலாம் என கூறப்படுகிறது.
நிதீஷை தொடர்பு கொள்ள முயலும் கட்சித் தலைவர்கள்
ஆதாரங்களை மேற்கோள் காட்டி, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக செய்திகள் வந்துள்ளன. நிதீஷ் குமார் தற்போது பாஜகவுடன் என்டிஏ கூட்டணியில் உள்ள அவர், நேற்று டெல்லி வந்து பிரதமர் மோடியை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ