மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது: நிதிஷ்குமார்

மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது என்று பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்!

Last Updated : May 19, 2019, 11:07 AM IST
மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது: நிதிஷ்குமார் title=

மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது என்று பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், மேற்குவங்காளத்தில் 9 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், இமாச்சலபிரதேசத்தில் 4 தொகுதிகளிலும், சண்டிகர் உள்ளிட்ட 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் பீகார் மாநிலத்தில் 8 மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. பாட்னா தொகுதியில் பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது. கோடைக்காலத்தில் மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்களாக நடத்தியிருக்கக்கூடாது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் நீண்ட இடைவெளி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார். 

மேலும், கோட்சே ஒரு தேச பக்தர் என பிரக்யா சிங் கூறியதற்கு கட்சி என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது அவர்களது கட்சி சார்ந்த விஷயம்; ஆனால் அத்தகைய கருத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என அவர் கூறினார்.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி 13 மாநிலங்களில் 97 தொகுதிகளிலும், 3 ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி 14 மாநிலங்களில் 115 தொகுதிகளிலும், 4 ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி 9 மாநிலங்களில் 71 தொகுதிகளிலும், 5 ஆம் கட்ட தேர்தல் மே 6 ஆம் தேதி 7 மாநிலங்களில் 51 தொகுதிளிலும், 6 ஆம் கட்ட தேர்தல் மே 12 ஆம் தேதி 7 மாநிலங்களில் 59 தொகுதிளிலும், 7 ஆம் கட்ட தேர்தல் மே 19 ஆம் தேதி 7 மாநிலங்களில் 59 தொகுதிளிலும் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News