அயோத்தி ராமர் கோயில்... திறக்கவே இல்லை அதற்குள் பெரிய மோசடி புகார் - பின்னணி என்ன?

Scam On Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோவில் வரும் ஜனவரி மாதத்தில் திறக்கப்பட உள்ள நிலையில், அதன் கட்டுமானம் சார்ந்து நடைபெற்ற மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 31, 2023, 09:09 PM IST
  • கட்டுமானத்திற்கு நிதி வசூலிப்பதாக கூறி பக்தர்களிடம் மோசடிக்காரர் நன்கொடை பெற்றிருக்கிறார்
  • இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றதாக கூறப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில்... திறக்கவே இல்லை அதற்குள் பெரிய மோசடி புகார் - பின்னணி என்ன? title=

Scam On Ayodhya Ram Mandir: உத்தர பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் ஜன. 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட உள்ளது. தரிசனம் பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள இந்து மத நம்பிக்கை உடையவர்கள் பெரும்பாலோனோர்கள் இந்த கோயில் திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

நன்கொடை மோசடி

அந்த வகையில், பக்தர்களிடம் இருந்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நன்கொடை வசூலிப்பதாக கூறி நடைபெற்ற மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்தது. இந்து மத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) இந்த மோசடி குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் விஷ்வ ஹிந்து பரிஷத் சமூக வலைதளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த மோசடி குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் அவரின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் சேத்ரா அயோத்தி, உத்தரப் பிரதேசம்" என்ற பெயரில் உள்ள போலி சமூக ஊடகப் பக்கம் குறித்தும் அதில் பவிட்டுள்ளார். QR கோடை கொண்ட இந்தப் பக்கம், ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடை பெறுகிரோம் என்ற போர்வையில் பக்தர்களிடம் பணத்தை கோரியுள்ளது.

மேலும் படிக்க | அயோத்தியில் புதிய விமான நிலையம் திறப்பு

மோடிக்காரர் பேசியது என்ன?

இந்த விவகாரம் உள்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி, உத்தரபிரதேச காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். அயோத்தியில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால், அந்த மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நபருடன் தொலைபேசியில் உரையாடலில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ளார். அதுசார்ந்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. 

மோசடி ஈடுபட்டதாக கூறப்படும் அந்த நபர் தொலைபேசியில் பேசியதில்,"உங்களால் முடிந்தவரை பங்களப்பு செய்யுங்கள். டைரியில் உங்கள் பெயர் மற்றும் எண் குறிப்பிடப்படும். கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், உங்கள் அனைவரையும் அயோத்திக்கு அழைப்போம். நான் அயோத்தியில் இருந்து பேசுகிறேன்.

'எந்த நன்கொடையையும் ஏற்க மாட்டோம்'

முஸ்லீம் சமூகத்திற்கும் இந்து சமூகத்திற்கும் இடையே பிரச்னை நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். முஸ்லிம் சமூகம் கோவிலைக் கட்ட அனுமதிக்கவில்லை, எனவே கோவிலுக்காக நிதி திரட்டிகிறோம்" என்று அந்த நபர் மேலும் கூறினார்.

தொடர்ந்து வினோத் பன்சால் வீடியோவில் பேசியபோது, "ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர நியாஸ், யாரையும் நிதி வசூலிக்க அனுமதிக்கவில்லை. இதுபோன்ற மோசடிகளுக்கு மக்கள் பலியாகாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை அமைச்சகம், உத்தரபிரதேச டிஜிபி மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். நீங்களும் கவனமாக இருங்கள். இது மகிழ்ச்சிக்கரமான நிகழ்வாகும். நாங்கள் அழைப்பிதழ்களை அனுப்புகிறோம். நாங்கள் எந்த நன்கொடையையும் ஏற்க மாட்டோம்" என்றார்.

மேலும் படிக்க | 1000 ஆண்டுகள் தாங்கும்... ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து பாறைகள் - எதற்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News